தூங்கி எழு தோழா - சிஎம்ஜேசு

தூக்கம் மறந்து தொலைந்து போனாய் - உன்
இணையதளத்தில் சற்றே நீ தூங்கி எழு

தோளில் செல் வைத்து செவி தாழ்த்தி
உரக்கப் பேசினாய் அதனால் சற்றே தூங்கி எழு

வேதனைகள் நிறைந்தது உன் வேலைகளின் சுமை
சற்றே தூங்கி எழு

உன் நினைவுகள் ஒரு நாள்வரை நீண்டு விடும்
சற்றே தூங்கி எழு

பொருளை வேண்டி பொழுதும் உழைக்கிறாய்
அதனால் சற்றே தூங்கி எழு

மற்றுமொரு மழை வந்தாலும் வரும் சேவையாற்ற
சற்றே தூங்கி எழு

உடலையும் உள்ளத்தையும் - சின்ன
தூக்கத்தில் பொதித்து வை உன்

எண்ணங்கள் எழுசிகள் கண்டு மீண்டும்
பூமியினை வழி நடத்தும் அதனால் தூங்கி எழு தோழா

சற்றே தூங்கி எழு

எழுதியவர் : சி.எம்.ஜேசு (21-Dec-15, 12:32 am)
பார்வை : 188

மேலே