தாயினும் சிறந்தது கோயிலுமில்லை
தாய்..................
கண்முன் தெரியும்
கடவுள் அவள்---தன்
உயிருக்குள் உயிர் சுமக்கும்
உன்னத உலகம் அவள்...........!!!
கருவுற்ற நாள்முதல்---தன்
கருத்தை அதன்மேல்
செலுத்தும் காரியக்காரி......
பிள்ளை பிறந்தவுடன்----அதன்
பூமேனி வாசத்தில்
தன் லிமறக்கும் சாகசக்காரி.........!!!
பிள்ளை தன்பெயர்
சொல்ல---அதன்
கனிவாய் திறந்து
"அம்மா"என்றழைக்ககாத்திருப்பாள்..--அதன்
பூவிழி பார்த்திருப்பாள்.......!!!
குழந்தை அழுகுரல்கேட்டு
தன் மார்போடு அணைத்திருப்பாள்...பின்
பாலூட்டித் தன் அகம்
மகிழ்ந்திருப்பாள்.....!!!!
மழலை மொழிகேட்டு--தன்
மனக்கவலை மறந்திருப்பாள்.......
பிள்ளைதன் முகம் தவிர----வேறோர்
முகம் காண மறுத்திருப்பாள்.......!!!
ஒரு வார்த்தைக் கவிதை அவள்.....
அதனுள்.......
ஓராயிரம் அர்த்தங்கள்
அமிழ்ந்திருக்கும்.........!!!!
மலரினினும் மெல்லிய
மென்மையில்லை.....
கவிதையினும் சிறந்ததொரு
கலையில்லை......
அன்பினும் சிறந்ததொரு
மருந்தில்லை....--ஆம்
தாயினும் சிறந்ததொரு கோயிலுமில்லை.......!!!!!!