அவள் என்பது - கற்குவேல் பா

ஓரெழுத்தில்
கவிதை கேட்டால்
யோசிக்காமல்
" நீ " என்று
எழுதிவிடுவேன் ..
ஒரு புள்ளியில்
கவிதை கேட்டால்
உன்
உதட்டின் மேலுள்ள
" மச்சம் " தவிர
வேறென்ன
எழுதத் தோன்றும்
எனக்கு !

#சில_நொடிக்_காதல்

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (21-Dec-15, 10:03 am)
பார்வை : 82

மேலே