காதல் துளிகள்

கடவுள் முன்
வரம் வேண்டிச்
சிலையாய் நின்றாய் நீ ....!
கற்சிலையோ கண்திறந்து
உன்னையே
பார்த்துக்கொண்டிருக்கிறது ...!!!
************************************************************
காதல் தீவிரவாதி நான் ...
என்னைச் சுட்டுத் தள்ள
உன் பார்வை ஒன்று போதுமே ....!!
**************************************************************
உன் காதல் புத்தகத்தைப்
புரட்டாமலே
வைத்திருக்கிறாய் !
கறையான் அரித்து விடக்கூடும் ...!!
******************************************************************
உன் விழி பாய்ச்சிய
காதல் தோட்டாக்கள்
சல்லடையாய்த் துளைத்தது
என் இதயத்தை ....!!
*********************************************************************
வாய் திறக்க வேண்டாம் .
இதழ் சிரிக்க வேண்டாம் .
.மௌனம் கலையாதே ...
கண்கள் கதைக்கட்டும்
என்னோடு ....!!