வெளிமளம் கவிதை

வெளிமனம்…!!
*
மனமது செம்மையானால்
மருந்துகள் எதுவும் வேண்டாம்.
*
மகிழ்ச்சியாயிருக்க விரும்புகிறான்
இருக்க விடுவதில்லை வெளிமனம்.
*
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை
சுற்றம் பார்க்கின் குற்றமில்லை.
*
பகை பங்காளிகளாய் பிரிக்கிறது
வெறுப்பு வெறுப்பவரை அழிக்கிறது.
*
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
சித்திக்கு அதிகாரம் கிடைத்தால் எஜமானி.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (21-Dec-15, 6:04 pm)
பார்வை : 68

மேலே