என்னோடு நீயிருந்தால்
அலை அலையாய் காற்றில் எந்தன் குரலினை
எடுத்து செல்லும் செல் பேசியே
நீ எடுத்து செல்வது வெறும் ஒலி சமிக்ஞை அல்ல
என் மனதில் நிறைந்து இருக்கும் என் தேவதையின்
அழகு குறிப்புகள் சிந்தாமல் சிதறாமல்
என்னவளின் முகவரி தேடி சேர்ப்பாயோ
என் உயிர் காப்பாயோ
அவளை காணாமல் காற்றில் கரைந்து போனாலும் போவேனே
சீக்கிரம் அவளிடம் என் தகவலை சேர்த்து விடு
என்னிடம் அவளின் பதிலை கொடுத்துவிடு
அவளன்றி என் அணு எதுவும் அசையாது
அசையா பொம்மையைப் போலானேன்
பொம்மையாய் போனாலும் என் சிந்தையெங்கும்
உந்தன் விந்தையாய் உள்ளதடி
உன் கரு விழி காண்பேனோ உயிர் பெற்றெழுவேனோ
உயிர் மட்டும் வந்துவிட்டால் உனையினி இழப்பேனா
உனை விட்டுப் பிரிவேனா
இனியொரு முறை உனை கண்டால்
வானமும் வசமாகும் காலமும் கனிந்து விடும்
நாம் சேர்ந்து வாழும் நேரமெல்லாம்
நம் வாழ்வின் பொன்னாகும் என்றும்
பெண்ணே நீ எப்போதும் என்னுடன் இருந்தால்.