ஓர் பெரும் வரம் நீ
வாராத வரவை எண்ணி
வாய்க்கணக்கிடும் வியாபாரியை போல்
சேராத உறவை எண்ணி
வாழ்க்கைக்கணக்கிடும் முதிர் கன்னியை போல்
சாராத அறிவை எண்ணி
மனக்கணக்கிடும் மக்கு மாணவனை போல்
நேராத பிரிவை எண்ணி
நேர்ந்திட நேந்துக்கொண்டிருக்கும்
இன்பங்களை மறுதலிக்கும்
தவமின்றி நான் பெற்ற
ஓர் பெரும் வரம் நீ நீ நீ ........

