நின் இனிமைக்கு இணை ஏது

இம்மியளவே இருக்கும் தன்
இழி இருப்பினை இருப்பதாய்
இடஞ்சுட்டி காட்டிக்கொள்ள
இறுமாப்புடன்
இங்கிடுக்கினில் எங்கோ
இனியவள் உன்னிடம் எப்போதோ
இறங்கி இரந்து இரவலாய்
இனிமையை பெற்றவன் இவன் ...
உன் இனிமையின் ஈர்ப்பு வேண்டி
அலையாடி விளையாடி தன்னிலை தாண்டி
தேடி நின் திருப்பாதங்கள் தனை தீண்டி
மீன்கடல் எனுன் பெயர் நீக்கி
தேன்கடல் ஆக்கிடும் உன் இனிமை
சிறு குண்டுமணி அளவேயான
நின் சுவாசத்தின் சுவடதன்
இனிமைக்கு இணையாகுமோ
இவன் தன் ஆக தேகத்தின்
ஒட்டுமொத்த சோக சுவையதுவும் .......