காதலின் மகோன்னதம்
* நான்
நேசிக்கிறவள் ;
புன்னகைத்து
பேசிக்கொண்டேயிருக்கிறாள்
செல்பேசியில்
பொழுதெல்லாம்
தான் நேசிக்கிறவருடன் ...!
* காணும் - என்
விழிகள்
தொடர் கனமழை
பொழிந்தாலும்...
ஏனோ
பூரித்து
சந்தோஷிக்கிறது
மனம் ;
அறிவிக்கிறது
உதடு
முணுமுணுத்து ...
" காதல் வாழ்க..! "