நீ தேவையில்லை

பல நேரங்களில் இருள் போர்வைக்குள்ளே.. .
உன் நினைவில் நான்...

என்னை சுற்றியும் இருள் தான்;
தூக்கம் தொலைத்த பொழுதுகளில் எல்லாம்..!! !
பாதியில் மறைந்து முடிந்து போன கனவுகளின் நினைவுகள் மூச்சை அடைக்க..!!

பாழாய் போன இருள் கூட என் கழுத்தை நெரிக்கும்.. என் தனிமை அரக்கனுடன் சேர்த்து..!!

இருளின் தனிமையில் தூரத்தில் தெரிந்த மங்கிய ஒளி போலே
உன் நினைவு..!!

உன் நினைவால் உனக்கும் பயன் இல்லை.. எனக்கும் பயன் இல்லை. .

இந்த இரவுக்கும், இருளுக்கும் தெரிந்த ஓர் உண்மை உனக்கு புரிந்ததே இல்லை...!!!

சரி விடு போய் தொலைகிறேன்
நீ தேவை இல்லை..
என் கண்ணீர் தாங்க.. என் கனவுகளே போதும்...!!

எழுதியவர் : இவள் நிலா (21-Dec-15, 8:01 pm)
Tanglish : nee thevaiyillai
பார்வை : 249

மேலே