உன்னிடம் என் துடிப்பு
* * * * * * * * * * * *
அந்த ஆதிகால
வரவேற்பு போல
உன்னுள் நிலை கொண்ட
என் நிழல்களை
பன்னீர் தெளித்து
ஏன் சந்தனச் சாந்திடுகிறாய்
முத்து முத்தான கையெழுத்து
என்று எத்தனை தடவை
சொல்லி இருப்பாய். .
இன்று கையெழுத்திட்ட
என் மணநாள் அழைப்பிதழில்
என் தலையெழுத்தைக்
கண்டு பிடிப்பாயா.......?
அழைப்பிதழை உனக்கு
தருவதாய் இல்லை
அதனுள்ளே என் துடிப்புள்ள
இதயமும் பத்திரமாய் வைத்து
அனுப்பி வைத்துள்ளேன்
கண்டிப்பாய்
நீ வருவாய் என்றல்ல
கைப்பற்றிக் கொள்வாய்
என்ற நம்பிக்கையில். ....!!!
- பிரியத்தமிழ் -