தேவதையின் காதல்
காதல் வேண்டாம் தான் என்றிருந்தேன்
உன்னை கண்ட பின் யாவும் கலைந்து போனது
உன் முகம் தவிர
உனக்கொரு காதல் கடிதம் எழுதத் தான்
எங்கு சென்று நான் கவிதைகளை திருடுவேனோ
வின்னை வருடிச் செல்லும் மேகங்களாய்
என் இருதயத்தை வருடிச் சென்றவளே
திருப்பிக் கொடுக்கத் தான் எப்பொழுது நீ வருவாயோ
உன் சுவாசம் தேடியே பூக்களை நான் முகர்கிறேன்
மரமாய் வாழும் என்னுள்ளே சிறு மகரந்தம் தான் தெளித்துச் செல்வாயோ
பூக்களும் நமக்குள் வாசம் செய்யட்டும்