வீர மரணம்
நான் உன் மீது தொடுத்த போர் இன்றுடன் முடிகிறது
போர் முடியும் முன்னே
உன் சரணம் பற்றுகிறேன் உன் சரணங்களையே பற்றுகிறேன்
பொழுது சாயும் முன்னே
என்னை வீழ்த்தி விடு வீரனே
நான் இறந்த பிறகு
என் உடலை காக்கைக்கும் கழுகுகளுக்கும் கொடுத்து விடு
என் தேகம் அருந்தி
அவைகள் பசியாற்றிக் கொள்ளட்டும்