நல்லவனை ஆண்டவன் சோதிப்பான்,ஆனா
களம் களமாக நெல் மணியாக கொட்ட வேண்டும் என்ற நம்பிக்கை
நில சொந்தக்காரனுக்கு ஏற்படுவது இயற்கை.
அந்த நம்பிக்கையோடு நடப்பட்டிருக்கிற நெல்
பயிருக்கு தாராளமாக நீர் பாய்ச்சுகிறான்.
அப்படி கிடைத்த நீரை உண்டு வாழும் நெல் என்ன செய்ய வேண்டும் ..?
சடை சடையாக காய்த்து அமோக விளைச்சலாக தன் நன்றியை தன் எஜமானனுக்கு காட்ட வேண்டியது.....
கடமை மட்டுமல்ல ..? ஞாயமும்கூட..
இடைப்பட்ட நேரத்தில் நெற்பயிருக்கு நோய் தாக்கல் ஏற்படும் சூழலில் பதறிப்போய் எங்கே இந்த நெல் நம்மை ஏமாற்றி நட்டத்தில் கொண்டு விட்டுவிடுமோ என பயந்து வைத்தியம் பார்க்க வேண்டியதும்...
எஜமானன் கடமையே..!
நெல்லுக்கு நீர் பாயும் கால்வாயின் ஓரத்தில் இருக்கும் புல் தனக்கு கிடைக்கும் நீரை உண்டு வாழ்கிறது ..
அங்கே இருக்கும் புல் எல்லாவற்றிற்கும் நீர் கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.
நீரோட்டத்திற்கு மிக அருகில் இருப்பதாலேயே சில புல்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கிறது .
எஜமானன் தனக்குத்தான் நீர் பாய்ச்சுகிறான் என்று புல் நினைக்க கூடாது..
எஜமானனுக்கு புல்லுக்கு கிடைக்கும் நீரை பற்றி கவலைப்படவே தோணாது. கீழே சிந்தும் சில உணவு பருக்கைகளை போலவே அது அவனுக்கு ..
அவன் புல்லிடம் இருந்து எதையும் எதிர்பார்க்க போவதில்லை..அதை ஒரு பொருட்டாகவே கருத போவதுமில்லை...
அப்படியே நன்றி கடனாக அந்த புல் தன் எஜமானன் கால் பாதத்திற்கு தெரிவித்தாலும் அவன் அதை கண்டுகொள்ள போவதும் இல்லை.
ஏனெனில்
அதுவே இயற்கையின் நடைமுறை.
நெல்லின் மேல் இருக்கும் அக்கறை புல்லின் மேல் துளி கூட இருக்காது.
அதை விடுத்து...
பாய்ச்சிய நீரை எல்லாம் உறிஞ்சி வாழ்ந்த நெல் பதராக மாறினால்....?
அது செய்நன்றி கொன்ற செயலாகும் .
இந்த சமயத்தில் எஜமானன் இடிந்து போவது இயற்கை தானே?
நல்ல விளைச்சலை கொடுக்க வேண்டியது நெல்லின் கடமை.
மணி மணியாக குவிக்கிறேனே என்று நீரை குடித்து வாழ்ந்த நெல் பெருமை பீற்றிக்கொள்ள கூடாது.
இங்கே...
பாய்ச்சிய நீரை எல்லாம் உறிஞ்சி வாழ்ந்த பயிர் நெல்மணியை தராமல் பதரை தந்து ஏமாற்றுவதற்கு சாத்தியக்கூறுகள் பல உள்ளன.
ஆனால் எதேச்சையாக கிடைத்த சிறிதளவு நீரை மட்டுமே உண்டு வாழ்ந்த புல் எஜமானன் பாதம் மட்டுமின்றி தன் மீது நடக்கும் எல்லோர் பாதத்திற்கும் சுகத்தையே கொடுக்கும் ..
புல் என்றுமே முள்ளாக மாறாது..!!
நினைத்துப்பாருங்கள்,
எஜமானனை கடவுளாக,
நெல்லை நல்ல மனிதனாக,
புல்லை கெட்ட மனிதனாக.
சில நேரம் கடவுள் கெட்டவனுக்கும் ஆதரவு தருவதாக தெரியும்,
ஆனால் அது தவிர்க்க முடியாத தற்காலிகமே. அது கெட்டவன் திருந்த ஒரு வாய்ப்பாக அமைதல் அவன் செய்த முன் ஜென்ம கர்ம பலன். அவ்வளவே.
"நல்லவனை ஆண்டவன் சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்..
கெட்டவனுக்கு அள்ளித்தருவான்; ஆனா முக்கியமான நேரத்தில கை விட்ருவான்" .