பதில் இல்லையே

புதிதாக வந்த எந்த ஒன்றும் வந்த புதிதில்
நம்மை மிகவும் கவரும் . அப்படித்தான் , அம்மா உணவகம் வந்த புதிதில், என் அப்பா ஆ , ஊ னா வீட்டில சண்டை போட்டுட்டு அம்மா உணவகத்தில் சாப்பிட போய் விடுவார் . ஒரு நாள் நான் கோபம் வந்து, " உனக்கு அசிங்கமா இல்ல . சாப்பாடுக்கே கஷ்டப் படுரவங்களுக்காகவும் , பிச்சை எடுத்து பொழப்பு நடத்துரவங்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. ஒன்னு வீட்டில சாப்பிடு இல்ல கடையில சாப்பிடு . அவங்க சாப்பாடுல பங்கு போடாத " ன்னு கத்திட்டேன் .

என் அப்பா சொன்னார் , " போமா , பெரிய பெரிய ஈபி ஆபிசர் எல்லாம் அங்கதான் சாப்பிடுறான் ".

இன்னொரு நாள் ,

என் அம்மாவிடம் ஒரு உணவகத்தில் இரவு உணவு வாங்கி வரச் சொன்னேன் . என் அம்மா உணவு வாங்கி வந்துவிட்டு சொன்னார் , " ஹோட்டலுக்கு வெளிய பகல்ல பிச்சை எடுப்பாள அவ ஸ்பெஷல் தோசை பார்சல் வாங்கிட்டு இருக்கா".

இப்போது என் அப்பா என்னை பார்த்த பார்வைக்கு என்னிடம் பதில் இல்லையே !

" ஐயோ லூசு அனு, கோபத்தில அப்பாவை அசிங்கமாயில்ல ன்னு வேற கேட்டிட்டியே . இப்பம் இப்படி பல்ப் ஆயிடிச்சே " என் தலையில் நானே போட்டுக்கொண்டேன் .

எழுதியவர் : அனுசுயா (23-Dec-15, 2:16 pm)
Tanglish : pathil illaiye
பார்வை : 237

மேலே