சொந்த பந்தங்களிடையே வெற்றியுமில்லைதோல்வியுமில்லை
ரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்த பலர் இன்று இல்லை.
சொந்தமும் பந்தமும் ஆக கூடி குலவி,சிரித்து வாழ்ந்த நாட்கள் எல்லோர் மனதிலும் இருக்கு.
இருக்கும் போது பேசி மகிழ்வதை விட்டுவிட்டு போனபின் கும்பிட்டு வணங்கி என்ன பயன் ?
இந்த உலகில் யாரும் யாரை சார்ந்தும் இல்லை. எல்லோரும் அவரவர் வாழக்கையை அவரவர் வசதிக்கேற்ப வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் .
சொந்தம் என்பது ..
இப்பிறவியில் மட்டுமே ஏற்பட்ட பிணைப்பு.
முற்காலத்தில் பந்தங்களை இணைக்க பயன்பட்டது கடித போக்குவரத்துமட்டுமே..
இருந்தாலும் அன்றைய மக்களிடம் இருந்த பாச பிணைப்பு..!!
சொந்த பந்தங்களை பெரும்பாலும் தனிமை படுத்துவது..
மமதை..
செருக்கு..
இறுமாப்பு ..
பொறாமை..
அகம்பாவம்..
அனைத்தும் ஒன்றாக ..ஈகோ
இவைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டே இருப்பவர்கள்
இறுதியில் கொண்டு போக போவது ...?
சொந்த பந்தங்களிடையே வெற்றியுமில்லை..தோல்வியுமில்லை
மல்லாந்து படுத்து எச்சிலை துப்புவதால் என்ன பயன் ..?
இழப்பதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில் ஏன் இந்த தயக்கம் ..?
கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறது நம் மகிழ்ச்சி ..!!