ஆதலினால் காதலித்தேன்- சில எண்ணங்கள் -2

உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!
உடம்பு நேராச்சு
மச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்
மனத்துக் கொத்த தடீ!
இச்சை பிறந்ததடீ-எதிலும்
இன்பம் விளைந்த தடீ;
அச்ச மொழிந்த தடீ;-சகியே!
அழகு வந்த தடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கை
இட்ட விடத்தினி லே
தண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் -அங்ஙனே
கண்ணின் முன் நின்ற தடீ!

...இவ்வாறு கண்ணனை காதலனாக பாவித்து மகா கவி பாரதியாரும்

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே ..

என்று இறைவனை திருஞான சம்பந்தரும் துதித்தது ஒருவகைக் காதல் ..

ஆனால்..

காதல் என்பதற்கு நாம் கற்பித்துக் கொண்ட அல்லது நமக்கு தெரிந்த ஒரே அர்த்தம்தான் இருக்கிறதா என்றால் ..மன்னிக்கவும்.. இல்லை என்பதே உண்மை..இதை திரு. அபி அவர்கள் "ஆதலினால் காதலித்தேன்" என்ற அவரது நாவலில் காதலின் பல பரிமாணங்களை எடுத்துரைக்கையில், எத்தனை காதல் இதுவரை ஒவ்வொருவருக்கும் வாய்த்திருக்கும் என்பது அவரவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்..

ஐந்தாம் வகுப்பு அல்லது ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, உங்களில் பலருக்கும் ..எனக்கும் கள்ளம் கபடமில்லாத ..அன்பை செலுத்தும் எதிர் பாலினத்து நட்பு ஒன்றேனும் இருந்திருக்கும்..அதுவே நம் உலகமாக எண்ணி நம்மை நடை போடவும் வைத்திருக்கும்..மென்மையான அன்பை பகிர்ந்து பின் நம்மை விட்டு விட்டு அந்த நட்பு பிரிந்து சென்றிருக்கவும் கூடும்..ஆனாலும்..ஆண்டுகள் பல கடந்தும் வட்டச் சம்மணமிட்டு நம் இதயத்தில் உட்கார்ந்தபடி நம்மை விட்டு விலகாமல் இருக்கும் அந்த நட்பை..இனம் புரியாத ஏக்கத்தை ..என் வெளியேற்ற விரும்பாமல் சுகித்திருக்கிறோம்..?..அப்படி ஒரு பால்ய சிநேகிதத்தில் தனது ஐந்தாம் வகுப்புத் தோழியிடம் மலர்ந்த அன்பும் திடீரென அவளைப் பிரிய வேண்டிய சூழ்நிலையில் அந்த சிறு பெண் ஒரு புத்தகம் கொடுத்து விட்டு பிரிந்தது பற்றி குறிப்பிடுகிறார்..இவ்வாறு:


"அவள் கொடுத்த புத்தகமும்,அவளைக் குறித்த நினைவுகளும் எனக்கு மறக்கவில்லை.ஆண்டுகள் சில கழிந்தன.அவளுடைய நினைவுகள் எனக்குள் மாறாமல் புதுப்புது உணர்வுகளை பின்னாளில் ஏற்படுத்தியது.அதற்குப்பிறகு அவளை நான் இதுவரை நேரில் பார்க்கவில்லை.முதன் முதலாக,பரிசாக புத்தகங்களையும் கொடுக்கலாம் என்றும்,அதன்மூலம் புத்தகங்களின் மீதான காதலையும், அவள்தான் எனக்கு அறிமுகப்படுத்தினாள்.
ஆதலினால் நான் காதலித்தேன் அவளை...!.இப்போதும் காதலிக்கிறேன்.!
அவள் பெயர் வளர்மதி.! "
..
..
காமம் கலந்த ஒன்றுதான் காதல் என்று நினைப்பவர்களுக்கு அலாவுதீன் தூசு படிந்திருக்கும் ஒரு அற்புத விளக்கை துடைப்பது போல் துடைத்து அதிலிருந்து அவர் சொற்படிஎல்லாம் கேட்கும் பூதமாக (நல்ல) பறந்து..உயர்ந்து ..பறக்கிறது ..
அவரது நாவலும் அவரது உயர்ந்த எண்ணங்களும்..!

அன்புடன் ..கருணா .

(தொடரும்)

எழுதியவர் : கருணா (23-Dec-15, 5:10 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 90

மேலே