வாழ்வியற் குறட்டாழிசை 16 பொறுமை

வாழ்வியற் குறட்டாழிசை. 16
பொறுமை.


இகழ்வாரைப் பொறுத்தலும் ஓரளவோடு உனை
அகழ்ந்து புதைக்காமற் பார்.

பொறுமையெனும் பண்பு மனித வாழ்வில்
பெருடையுடைய ஒரு திறவுகோல்.

ஆணவம், அகங்காரத்தை பொறுமையால் கொல்பவன்
நாணவும் தேவையில்லை எதற்கும்.

வாயாடியுடன் சொற்களால் பேயாடுவதிலும் பொறுமையுடன்
போராடுதல் வெகு சிறப்பு.

பொறுமையெனும் கனி பழுத்திட கடுமையாக
வறுமைப் படுகிறார் பலர்.

கெட்டவனைத் தன் பொறுமையால் சாதுரியமாய்க்
குட்டுதல் நற் பண்பு.



ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
13-10-2011.

(மேலேயுள்ள பன்னிரண்டு வரிகளும் வழமை போல நானாக எழுதியது. மகளிடம் போயிருந்த போது பெரிய பிரித்தானியாவில் இருக்கையறையில் இருந்து இதை எழுதியபடி கதைத்தேன். ”அம்மா என்ன பரீட்சைக்குப் படிப்புது போல செய்கிறா´´ என்று கூறினா. ” ஓன்றுமில்லை மகள்! பொறுமை பற்றி எழுதுகிறேன். பொறுமை பற்றி உன் எண்ணத்தை கூறேன்” என்றேன். கீழ் வரும் எட்டு அடிகளும் அவரின் கருத்துகளே. இவர் மனோ தத்துவத்தில் டிப்ளோமா முடித்தவர். இதை ஏன் கூறுகிறேன் என்றால் கீழே வரிகள் முழுவதும் உணர்வு சம்பந்தமாகவே உள்ளது. இது தவிர டென்மார்க்கிலிருக்கும் போது தமிழ் சஞ்சிகைகட்கு கதைகள் எழுதினார். இலண்டனில் தனது வைத்தியசாலைச் சஞ்சிகையில் ஆங்கிலத்தில் சிறு கதைகள் எழுதியவர். சிறந்த பாடகி. ஓவியக்காரி. இனி படியுங்கள்!)

பொறுமை பொறுமையென்று மனித உணர்வுகளைக்
குறுகிடச் செய்தல் சரியல்ல.

தனக்கு ஆபத்து என்றால் பொறுமை
விலக்கு! துணிந்து எழு!

பொறுத்தார் பூமியாள்வாராம்! தன்னையிழந்த பின்
பொறுத்து என்ன பயன்!

கேடு செய்வோரை உணரவிடாது பொறுமையென்று
பாடு படுத்தல் வீண்.



ஆக்கம் லாவண்யா. கிறே.(Graham)

U.K

எழுதியவர் : வேதா. இலங்காதிலகம். (24-Dec-15, 12:09 am)
பார்வை : 83

மேலே