மாமியாரும் , மருமகளும்
மாமியாரும் ... மருமகளும்...
----------------------------------------------
மாமியாரும் , மருமகளையும் எப்பொழுதும் போட்டியாளராகவே சித்தரித்துள்ளனர்... இன்றும் நடை முறையில் உள்ளது தான்..
ஏனோ தெரியவில்லை... ஒரு பெண்ணிற்கு என்னதான் மாமியார் நல்லவளாக இருக்கட்டும், பாசமுடன் இருக்கட்டும். தன தாய் ஸ்தானத்தில் வைத்துப்பார்க்க மறுக்கின்றாள் .. இது உண்மை தான்... அவள் பெற்ற மகன் தனக்கு எல்லாமாய் இருக்க வேண்டும் , அவனிடத்தில் அணைத்து உரிமையும் வேண்டும் அது போல் தானும் அவனுக்காக எல்லாம் செய்வாள்....
அம்மா என்ன சொன்னாலும் அதை பெரிசு படுத்தாதப பெண், மாமியார் தவறி ஒரு வார்த்தை சொன்னால் சுருக்கென்கிறது.... உண்மைதான்... அம்மா சொல்வது உரிமை என்றும் மாமியார் சொல்வது அதிகாரம் போல் உணருகிறாள்... இதில் தவறு என்று சொல்ல முடியாது... சற்று எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் ...
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இரு நெஞ்சங்கள் இணைந்து ஒரு அற்புதமான இல் வாழ்க்கை அமையவில்லையா ??? அவனைப பெற்றவளை நம் தாய் போல் நினைப்பதில் தவறென்ன??? சற்று முற்போக்காய் யோசிப்போமே!!!
நான் ஆராய்ந்ததில் ....
எவர் மனதையும் புன்படுத்த நான் இங்கு ஒரு சொல்லையும் பதிவு செய்யவில்லை... நானும் ஒரு பெண், மருமகள், மாமியார் ஆகப்போகிறவள்...
முன் காலத்தில், சிறு வயதிலேயே திருமணம் முடிந்து விடும்.. அதனால் வீட்டிற்கு வரும் பெண்ணிடம் கொஞ்சம் கட்டுக்கோப்புடன் இருப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்... தான் வைப்பதுதான் சட்டம் என்று ஒரு வரைமுறையை ஏற்படுத்தி வாழ்ந்தனர்... தனக்கு அடங்கித்தான் தன மகனை திருமணம் செய்து வருபவள் இருக்க வேண்டும் என்பதில் முழு கவனம் செலுததினர் .... இது அடுத்த தலைமுறை வரும் பொழுது.... என் மாமியார் என்னை இப்படிதான் நடத்தினாள் நான் மட்டும் ஏன் என் மருமகளை மகள் போல் நினைக்க வேண்டும் என்கிற எண்ணம்.. இது போல்தான் வாழையடி வாழையாக வந்துள்ளது மாமியாரின் ஆதிக்கம்....
இந்தப்போக்கு கால சுழற்சியில் பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபின் தனி குடுத்தினம் பெருகியது..... விளைவு நிறைய முதியோர் இல்லங்கள்.... இது குறை மருமகள் மீது மட்டும் சுமர்தப்படுகிறதுதான் பரிதாபம்... இருவர் மீதும் குறையிருக்கிறது... இருவரும் சேர்ந்து சற்று மனம் விட்டுப பேசினால் சரியாகிவிடும்...
பிரச்சனைகள் எல்லாம் எப்படி நம் வசமோ அதற்கு தீர்வும் நம் கையில்தான் பெண்களே....
மாமியார்களே வாருங்கள்..
-----------------------------------------
1. தன்னை மாமியார் எப்படி நடத்தினாரோ அது போல் தான் நானும் என் மருமகளை நடத்துவேன் என்ற எண்ணம் மாற வேண்டும்..
2. அந்தப் பெண் தன பிறந்தகதிலிருந்துப் பிரிந்து தனியாக இன்னொரு வீட்டிற்கு வருகிறாள்... அவளுக்குண்டான வசதிகளையும், மன அமைதியையும் குடும்ப தலைவி தானே சரி பார்த்துக்கொள்ள வேண்டும்...
3. சிறு தவறுகள் அவள் செய்தால் முறையாய் சொன்னால் கட்டாயம் புரிந்துகொள்வாள்....அதிகாரம் எதற்கு?
4. உன் பெண் சந்தோஷமாய் வாழ உன் மனம் துடிப்பது போலதானே அவள் தாயும் துடிபபாள்? நினைவில் வைத்துக்கொள் ..
5. உனக்கு உன் மகன், பேரப்பிள்ளைகள் மேல் இருக்கும் அதே உரிமை அவளைப் பெற்ற தாயக்கும் உள்ளதல்லவா ??
6. நீ உன் மகளாய் நினை, அவள் கட்டாயம் உன் மகளாவாள்.... நிச்சயம்...
7. தயவு செய்து பெற்றோரே, தங்கள் உடல் நலம் நன்ராய் இருக்கும் சமயத்தில் குழந்தைகளோடு இருங்கள்., உங்கள் உடல் குன்றியபின் அவர்களோடு சேர நினைப்பது தவறு... நன்றாய் இருக்கும் பொழுது ஒன்று கூடி வாழுங்கள்..... நிச்சயம் நன்மை பிறக்கும்... எனக்கு பென்ஷன் வருகிறது நான் தனியாகத்தான் இருப்பேன் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்....
மருமகளே கேட்டுக்கோ...
--------------------------------------
1. உன் கணவன் மட்டும் தேவை என்றால், திருமணம் எதற்கு???
2. உன் கணவனின் தாய் தான் உன் மாமியார், அவள் நீ கெட்டுப்போக நினையாள்.. சிறு கடும் சொற்கள் அதை மன்னித்து விட்டு விடு...
3. உன் தாய் உனக்கு நல்லதை சொன்னால் கேட்டுக்கொள்வாய் அல்லவா? அது போல்தான்....உன் மாமியாரும் நல்லதை சொன்னால் கேட்டுக்கொள்... பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு... எதிர்க்காதே...
4. நீ பெற்றெடுக்கும் பிள்ளை மீது எவ்வளவு பாசம் வைக்கிறாய்.... அதுபோல் தானே அவளும்... உன் கணவனை பெற்றவள் அன்றோ??? புரிந்து நடந்துக்கொள் ...
5. அவள் உடல் நலம் குன்றும் பொழுது உன் அருமை தெரியும்... அன்று உன்னிடம் பேசும் ஒரு வார்த்தை ஆயிரம் வார்த்தைகளுக்கு சமமாகும்... பொறுமைதான் முக்கியம்..
மாமியாரும் , மருமகளும் இனி நண்பர்களே...
இந்த மாற்றம் சற்று இப்பொழுது தலைத்தூக்கி உள்ளது ... மேலும் வளர வகை செய்வோம்... ஒன்று கூடி முயற்சிப்போம்....
ஸ்ரீமதி... மைதிலி ராம்ஜி