அற்புதமானக் கலை

.
அற்புதமானக் கலை ஓவியம்...!!!
---------------------------------------------------

"சூரியா!! சூரியா!!" அம்மா கூப்பிடும் சப்தம் கேட்டது... ஆனால் பதில் கூறும் மனநிலையில் அவன் இல்லை...
சற்று நேரத்தில் " ஏன்டா ! என்ன பண்றே? கூப்பிடறது கேட்கலே! காது செவிடா? " அம்மா கத்த ஆரம்பித்தாள்.. சற்று தலையை தூக்கிப் பார்த்தான்... தரையில் ஒரு காகிதத்தில் வரைந்துக்கொண்டிருந்தான்.... அம்மா " ஏய் என்னடா கிறிக்கிண்டிருக்கே?? நாளைக்குப் பரீட்சை ஞாபகம் இல்லையா? " பதில் எதுவும் வரவில்லை... அவன் வரைந்த பிள்ளையார் படத்தில் தும்பிக்கை சரி இல்லை... அதை எப்படி மாற்றுவது என்று யோசித்திருந்தான்...

கோபம் வந்தது அம்மாவிற்கு.... கீழ இருந்த காகிதத்தை எடுத்தாள்.. அவளைப் பொருத்தமட்டில் அது கிறுக்கல் தான்.. கசக்கி கீழ போட்டாள்... வேகமாகச் சென்றுவிட்டாள்... அழுகை வந்தது சூரியாவிற்கு...

மற்றொருநாள்..பள்ளியில் ஓவியப் போட்டி என்று சொன்னதால், சூர்யாவிற்கு உற்சாகம் ... தானும் கலந்துக் கொள்ள முற்ப்பட்டான்.. அம்மா திட்டுவாள் என்ற பயம் மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.... அவளை குறை சொல்வதற்கில்லை.... கணவன் இறந்து இவனை ஆளாக்க அவள் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்... கிடைக்கும் வருமானத்தில் இவனை படிக்கவும் வைக்கிறாள் ... ஆனால் சூர்யாவிற்கு படிப்பில் ஈடுப்பாடு இல்லை.. ஓவியத்தில்தான் .... வெளியில் சொன்னால் அம்மா திட்டுவாள் , சமயத்தில் அடிக்கவும் செய்வாள்... "என்ன செய்ய? " மனம் தவித்தது.... இரண்டு நாள் கழித்து பள்ளியில் சோகமாய் உட்கார்ந்திருந்தான்.. அவன் கணக்கு வதியார் இவனைப் பார்த்து " சூரியா! என்ன ஒரு மாதிரி இருக்கே " என்றார்.. " சார்... எனக்கு படிக்கரதிலே இஷ்டம் இல்லை.... ஓவியம் வரைய நிறைய ஆசை இருக்கு நல்லாவும் வரைவேன் என்றான்... " இதைக்கேட்டதும் வாதியார் ஆச்சரியப் பட்டார்.... " நல்லது தானே.... ஏன் அதற்கு சோகமா இருக்கே ? " " எங்க அம்மா திட்டுவா! கிருக்காதேனு
சொல்வா " என்றான் குழந்தைத்தனமாக... வாதியாருக்கு வருத்தமாய் இருந்தது.... " எங்கே நீ வரைந்த ஏதாவது ஒன்று காண்பி " என்றார்.... " பல் எல்லாம் தெரிய " இதோ ! பாருங்க" என்று தன புத்தகத்தில் வரைந்த மயில் படத்தை காண்பித்தான்....

அதை வாங்கிப் பார்த்தவர் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்தினார்.... " நல்லா இருக்கே... அற்புதம்... உனக்கு திறமை இருக்கு... எதிர் காலத்தில் சிறந்த ஓவியனாய் வருவாய்... நான் உன் அம்மாவிடம் பேசறேன்... பள்ளி முடிந்ததும் வரேன் உன் வீட்டிற்கு" என்றார்.... " உம... அப்படியா? " சந்தோஷம் அவன் முகத்தில்

மலை 4.30 மணி அளவில் அவர் சூரியாவுடன் அம்மாவைப் பார்க்க சென்றார்...
" அம்மா ! சூரியா நல்ல வரையறான்... அவனை ஊக்குவித்தால் எதிர் காலத்தில் பெரிய ஓவியனாய் வருவான்" என்றார்... " என்ன சார்.... இங்க 3 வேலை சாப்பிடவே நான் நாய் பாடு படறேன். நீங்க வரையரதைப்பற்றி பேசறீங்க.... " ஒட்டாமல் பேசினாள்..

" இல்லை... நீங்க கொஞ்சம் யோசிங்க.... அவன் முடிந்த வரைக்கும் படிக்கட்டும்.... அதற்கான செலவை பள்ளி ஏற்றுக்கொள்ளும் .. நான் அதற்கு பொறுப்பு... நீங்கள் அவன் வரையறதுக்கு தடை சொல்லாமல் இருங்கள் " என்றார்...
"என்னமோ செய்யட்டும்... " மனமில்லாமல் சொன்னாள் ... " சூரியா சந்தோஷ காற்றில் மிதந்தான்.... இனி கவலை இல்லை...

வரைந்தான் ... வரைந்தான்... தாகம், பசி மறந்து வரைந்தான்.... ஓவியப்போட்டிகளில் வெற்றி கண்டான்...

இன்று.... அவன் பெரிய ஓவியன்.... பெருமிதமாய் இன்று ஒரு கலை மேடையில் ... அவனுக்கு சிறந்த ஓவியன் என்ற பட்டம்.... அம்மா கண்கலங்கி பார்த்து மகிழ்ந்தாள்......

ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (27-Dec-15, 3:15 pm)
பார்வை : 200

மேலே