நான் பாடகன் ஆமாம்

நான் பாடகன்....
----------------------

ஹரி... இவன்தான் நம் கதையின் நாயகன்....

"பாட்டு ஒன்று நான் பாடட்டுமா? " முனு முனுத்துக் கொண்டிருந்தான்.... " என்னடா? சாப்பிடாமல் பாட்டு? உடம்பில் ஒட்டாது! ஒழுங்காய சாப்பிட்டுவிட்டு வேறு வேலை பாரு ! " இது அம்மா.. " ஏன் அம்மா அண்ணாவை எப்போதும் திட்டறே? அவன் நல்ல பாடறான்." தங்கை வனிதா பரிந்துப் பேசினாள்..

"என்ன பாட்டு? அதுதான் நமக்கு சாப்பாடு போடப்போறதா? நீ முதலில் போய் ஒழுங்கா படிக்கிற வேலையை பாரு... அவன் வேலையை தேடட்டும்..." திட்டவட்டமாய் சொன்னாள் அம்மா....

ஹரி... எம். எ. சோசியல் சயின்ஸ்... வேலை தேடறான். ஒன்றும் சரி வரவில்லை....

அம்மா " இதோ பாருடா.... நான் இன்னும் கொஞ்ச நாள்தான் வேலைக்கு போகமுடியும் டா... எனக்கு உடம்பு முடியலே.... இன்னும் உன் தங்கை இருக்கா கல்யாணத்திற்கு... நீ ஒழுங்காக வேலை பார்த்துக்கோ இல்லேன்னா கஷ்டம்தான்.... உங்க அப்பா நம்மை விட்டுப் போகும் போது உனக்கு வயசு 10 உன் தங்கைக்கு 6... நான் எவ்ளோ கஷ்டப்பட்டு உங்களை வளர்த்தேன்னு அந்த தெய்வதிற்குதான் தெரியும்.... போ. போ. ஒழுங்கா வேலை தேடரதைப்பாரு.... "

ஹரிக்கு கோபம் கோபமாய் வந்தது..." ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரியான வாழ்க்கை? தனக்கு பிடித்ததை செய்ய இததனைத
தடையா? " மனம் தவித்தது ....

அவனுக்கு 12 வயது இருக்கும் பொழுது தற்செயலாக ஒரு மேடை பாட்டு கச்சேரிக்கு சென்றான் பக்கத்துக்கு வீட்டாருடன்... அன்று வந்த ஆசை.... தானும் பாட வேண்டும்... பெரிய மேடை ஏற வேண்டும் என்கிற வெறி.... முறையாய் சங்கீதம் கற்றுக்கொள்ள விருப்பம்தான் ஏது வசதி???? வெளியில் சொன்னாலே உதை விழும் அம்மாவிடம் இருந்து... ஆசையை மனதில் புதைத்து வைத்தான்... சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பாடல்கள் கேட்டு கேட்டு கற்றுக்கொண்டான்.

அம்மாவிற்கு சுத்தமாக இவன் பாடுவதோ அதைப்பற்றி பேசுவதோ பிடிப்பதில்லை... அதனால் ஹரியும் வீட்டில் இருக்கும் சமயத்தில் அதுவும் அம்மா இருந்தால் பாடுவதோ, பாடல் கேட்பதோ இல்லை...

ஒரு நாள் டி .வி யில் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது... அம்மா மனசு சரி இல்லாததால் கொஞ்சம் அதன் முன் உட்கார்ந்திருந்தாள்... சட்டென்று வேறொரு சேனல் மாற்றினாள் அதில் யாரோ ஒரு சின்னப்பெண் பாடிக்கொண்டிருந்தாள் ... ரசித்தாள் அம்மா.. பக்கத்தில் ஹரியும் உட்கார்ந்திருந்தான் ... சிறு நேரத்தில், அம்மா கண்ணில் ஒளி, ஆச்சரியம்... அதிர்ச்சி... இப்போ பாடியது ???? ஹரி... தன மகன் ஹரி.... என்ன இது??? பக்கத்தில் இருக்கும் மகனைப பார்த்தாள்!!! ... "என்ன ??? இது இது நீயா??? " மேலே பேச முடியவில்லை... அவனோ ..." இசைக்கேட்டால் புவி அசைந்தாடும் " என்று தன கணீர் குரலில் பாடிக்கொண்டிருந்தான்... அது ஒரு மேடை கச்சேரி ... நண்பன் மூலம் வாயப்பு கிடைத்தது... அம்மாவிடம் 2 நாட்கள் வெளியூர் செல்கிறேன் வேலை விஷயமாக என்று கூறி சென்றான்....

நம்ப முடியவில்லை... தன மகன் தான் பாடினான் என்று !!! கண்ணீருடன் ஹரியைக் கட்டிக்கொண்டாள்... " போடா பாடுடா .. எவ்ளோ வேணுமோ பாடுடா... சம்பாத்தியம் இருக்கு... நான் உழைக்கிறேன்... இன்னும் எனக்குள் சக்தி இருக்கு. நீ பாடு.... உனக்கு இனி நான் தடையா இருக்க மாட்டேன்.." சத்தியமாய் கூறினாள் அம்மா .....

ஹரி ! மெய் சிலிர்துப்போனான் .... அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றான்...

பாடகன் உருவாகிவிட்டான்....


ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (27-Dec-15, 5:18 pm)
பார்வை : 122

மேலே