முதல் சந்திப்பு

என்ன வாழ்க்கைட இது ...ஒரே வெறுமையா இருக்குனு... தனக்கு தானே சொலிட்டு கார்த்திக் தான் பயணம் செயும் பேருந்தை பார்த்தான் வயதானவர்களும் வேலைக்கு செல்பவர்களும் இரண்டு மூன்று சிறுவர்களும் தான் .நாம் கொடுத்துவச்சது அவ்வளவு தான்னு தலையில் கையை வைத்து முன் இருக்கையில் சாய்ந்தான் சில நிமிடங்களிலையே தூக்கம் கலைந்து கண்ணை கசக்கி கொண்டு எதிரே பார்த்தான் ரோஜாபூ நிற உடையினிலே கார்மேகம் போல் திரண்ட கூந்தலுடன் அழகிய பேதயாய் அவள் இருந்தால் .தன் பெரிய கண்களால் கார்த்திக்கை பார்த்து கொண்டு இருந்தால் .கார்த்திக் ஒன்றும் புரியாதவனாய் அவள் ஏன் தன்னை பார்க்க வேண்டும் என யோசித்து பின்பு இப்படி உறங்கினால் யார் தான் பார்க்க மாட்டார்கள் என முடிவிற்கு வந்தான் ...ஆனால் அவள் தன் பார்வையை அகற்றவே இல்லை ....தன் அலைபேசியை ஒரு நாழிகை பார்த்து விட்டு திரும்பவும் கார்த்திக்கை பார்க்க ...கார்த்திக் உலகத்தையே வென்றவனை போல சந்தோசத்தில் மூழ்கினான் ....பேருந்து நின்றது அவள் இறங்கி சென்று விட வருத்ததுடன் வீடு திரும்பி இருக்கையில் அமர்ந்தான் கார்த்திக் ....கார்த்திக்கின் அம்மா அவனுக்கு காபி கொடுத்து விட்டு டேபிள்ல சாப்பாடு இருக்கு போடு சாப்டுகோன்னு சொல்லிவிட்டு பாகத்து வீட்டு ஆன்டி வீட்டுக்கு போய்ட்டாங்க .....எபோதும் அம்மா போட்ட காபிஅ ருசித்து குடிக்கும் கார்த்திக் மருந்து போல குடிச்சிட்டு இருந்தான் ...யாருடா அவ எதுக்கு வந்தா ஏன் பார்த்தா ஒன்றும் புரியலைனு மனசுக்குள்ள நினைச்சிட்டு ஒரு வழியா காபிஅ குடிச்சு முடிச்சான்....டேபிள்ல அம்மா எடுத்து வச்ச சாப்பாட்ட பார்த்தான் ....அட போடா எங்குட்டு சாப்பிடணு விரக்தியா சொல்லிவிட்டு.....தன் அறைக்கு சென்று படுக்கையில் சாய்ந்து செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடறவன் போல அவள் யார் என்று யோசித்து கொண்டு இருக்கும் வேளையிலே....தன் அலைபேசியில் முகபுத்தகத்தில் மெசேஜ் வந்திருப்பதாக காட்ட கார்த்திக் எடுத்து பார்த்தான். அது சக்தி அவனது காலேஜ் ஜூனியர் கார்த்திக்கின் நல்ல தோழி. முகபுத்தகத்தில் அறிமுகமாகி நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர் கார்த்திக் எந்த ஒரு விழயத்தையும் சக்தி உடன் பகிர்ந்து கொள்வான் அதே போல தன் மனசில் குழம்பி கொண்டு இருந்த அந்த பெண்ணை பற்றியும் சக்தியிடம் சொல்ல.....அவள் எந்த பதிலும் சொல்லாமல் ஆப்லைன்கு சென்று விட்டால் ...அரைமணி நேரம் கழித்து திரும்பவும் கார்த்திக்கின் அலைபேசி ஒலித்தது ......மீண்டும் சக்தி தான் ...அந்த மெசேஜ்அ பார்த்த உடனே உறைந்து போனான் கார்த்திக் ......இருந்தும் நம்பாதவனாய் அவளின் ஊரை பார்க்க ....இருவரும் ஒரே ஊர் தான் ......அந்த மெசேஜ்இல் நான் தான் அந்த பெண் என்று குறிப்பிட்டு இருந்தால் ......குழம்பி போன கார்த்திக் .....முகம் முழுதும் சிரிப்புடன் ....என்னமா நீங்க இப்படி பன்றிங்களேமான்னு சொல்லிவிட்டு ....அம்மா வச்சிட்டு போன சாப்பாட்ட ரசிச்சு சாபிடான்.

எழுதியவர் : MUNISHKUMAR (27-Dec-15, 2:36 pm)
சேர்த்தது : முனிஷ்குமர்
Tanglish : muthal santhippu
பார்வை : 210

மேலே