முனிஷ்குமர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முனிஷ்குமர் |
இடம் | : nagapattinam |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 203 |
புள்ளி | : 23 |
ஓய் மிஸ் அன்நோவனு
உன் நம்பர கொடுத்தா பன்னுவன் போனு...
உன்ன பார்த்ததால மனசுல...
உதிக்குது சன்னு
நீ பௌர்னமி நிலவு தான்னு தான்னு
உன்ன பாலோவ் பண்ணி நானும்...
தினம் கலைக்கிறன் தானே தானே...
லபபு் டப்புனு அடிக்கிற என் மனச
பக்கு பக்குனு அடிக்க வச்சிட்டு நீயும்
லவ்வு புக்க ஓப்பன் பன்ன மறுத்து
எங்க போற சொல்லு சொல்லு
ஓய் மிஸ் அம்மனி
தினமும் என்ன நீயும் கவனி
உன் மனச நானும் தட்டட்டா
சொல்லாத நீயும் கெட் அவுட்ட
மார்கழி மாசம் மைக் செட்டா
சத்தமா என் லவ்வ சொல்லட்டா
அதை நீயும் சொல்வியா ரிபிட்டா
ஓய் மிஸ் அனநோவனு...
காலிபுளவர் உன் கண்ணு
வாடாமல்லி கண்ணம் மேல
கலரா பவுடர் இருக்குது ஜோரா
உன்ன தேட
வாடா மச்சி வாடா
என்ன வாழ்க்கன்னு சொல்லாதே
வாழ்ந்து பாரு!
நேற்று ...இன்று...நாளை எலாம் ஒன்று தான்
வாழ்ந்து பாரு!
ஆடும் காலை கட்டி போடாதே
பாடும் பாட்டை மீயூட்டில் போடாதே
வாடா மச்சி... வாழ்ந்து பாரு!
நடுகாட்டில் ஆட்டை கட்டிப் போட்டால்
புலி பாயுமா..!
வெற்றி எளிதில் கிடைத்து விட்டால்
உன் திறமை வெளியில் தெரியுமா
தேடு தேடு தேடு
உன்னை உனக்குள்ளே தேடு ...
ஆடு மச்சி ஆடு...
இது உன் நேரம் ஆடு
கால்கள் ஓய்ந்தாலும் ஆடு
கை இருக்கு ஆடு
யாரு எது சொன்னாலும்..
மச்சி வாடாதே
காத்திரு காத்திருந்து காத்திருந்து....
காலம் வந்ததும் ...
ஆடு மச்சி ஆடு..
தள்ளி போன பொண்ணே
என்ன சொல்லி உன்ன
என் மனசுக்குள்ள அடைச்சி வைப்பன்
உன்னோட ஜாடை பேசி
கண்ணாலே காதல் பேசி
வயதை தொலைக்க ஆசை
உன்னோட வார்த்தை எலாம்
கம்பன் காவியமா ஒலிக்குதடி
அது உசுரோட கலந்து
நரம்பாக துடிக்குதடி...
காற்றின் மடியில்
தவழுதே உன் நினைவுகள்
என் கண்ணிலிருந்து விழுகுதே
கண்ணீர் துளிகள்..
உயிர் என் உயிரே...உனக்கு நிகர் இல்லையே
மெய்...உன் புன்னகை அது செம்மையே
உயிர்மெய்யே... உயிரோடு கலந்த தேவதை
நீ மெய்யே
ஆயுதம்...தேவையில்லை என்னை சாய்க்க
ஆழ முத்தம் போதுமே
குறிலாக உன் மேல் கோபம் கொள்ள
நெடிலாக நீ புருவம் தூக்கி சென்றாயே
இலக்கணம் காதலில் இல்லை
காதலுக்கு இலக்கணம் காதலியே
மோனையாக நீ முந்திச் செல்ல
எதுகை போல பின் வந்தேனே
ஐந்திணையும் தாண்டி ...அழகே
உன்னிடம் வந்தேனே
வல்லினமே...
மெல்லினமாய் ...காதல் சொல்லி
இடையினமாய் உன்னுள் சேர.,
அளபெடையாய் உயர்ந்து வருவேனே
சிலம்பும் ...மனிமேகலையும் சொல்லாத
காதல் கதை சொல்வோமே
தமிழக்கு தொல்காப்பியமாய்...
நான் உனக்கு இருப்பேனே...
உயிரே ..
உன் கருவினுள் உதிக்க
வரம் ஒன்று வேண்டும்-அடுத்த
ஜனனம் இருப்பின் - உன்
அன்பெனும் நதியில் அருவியாய்
நான் பிறக்க....
**********
உயிரே
உன் விழியினுள் ஒளியாய் வர
இமையிடம் கேட்க.- இதழ்கள்
இசைந்ததால் முத்தமாய் சிக்கினேனே
**********
உயிரே
பிரிவினில் உள்ள துயரம்
உன் நினைவுகள்-என்னை
பிரியாததாலே......
***********
உயிரே
என்னை விட்டு உன்னை
கண்ணீராக வெளியேற்ற நினைத்தேன்
நனைந்தது நான் -அதில்
வளர்ந்தது நீ...
என் அன்பே...
***************
வெளிச்சம் இருளை விலக்கும்
இன்பம் துன்பத்தை நீக்கும்
காலை கனவை கலைக்கும்
உன் அமைதி சுதந்திரத்தை பறிக்கும்...
குரல் உயர்த்து இயலாமையை கருவறுத்து...
சொல்லும் போதே ...உன் பெயரை ...
நாவில் இனிக்கறதே........
தள்ளாடிய மனதை
களவாடிச் சென்றவளே .......
உன்னிடம் சரணடைந்தேன்
ஆயுள் தண்டனை கொடுத்து விட்டாயே .......
அணுக்களை பிரித்து ஆயுதமாக்கும்
இக் கலியுகத்திலே
காதலை சேர்த்து ..வாழ்கையை போற்றும்
பழக்கம் வளரளியே ........
சாதிகள் பார்க்கும்
சாமானியர்கள் இருக்கும் வரை
சத்திய காதல் வெல்லாதே.....
உன்னை மறந்து செல்ல மனமும் இல்லை ...
வண்ண மலர் உன்னை வாடவிட ...
எண்ணமும் இல்லை .
உன்னை வாழ்த்துகிறேன் ...
என்னை மறந்து சென்றுவிடு பெண்ணே ...
கண்ணே ...உன்னை மட்டும் மறக்கச் சொல்லாதே .
மித்ரா இன்னும் எவ்ளோ நேரம்தான் தூங்குவ என்று சத்தமிட்டுக்கொண்டு அலமாரியில் பைல்களை தேடிக்கொண்டிருந்தான் ரியான்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரியானுக்கு வேலை இருக்காது என்று நினைத்து அலாரம் வைக்காமல் தூங்கிவிட்டாள் மித்ரா.
ஒரு வழியாக ஃபைலை கண்டுபிடித்துவிட்டு ஏதோ திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டதுபோல் ஒரு உணர்வு ரியானுக்கு. ஹே மித்ரா எந்திரிச்சு தொல டி எரும மற்றும் தன் மாமனாரின் வளர்ப்பு பற்றி சில பல கவிதைகளை வாசித்தவாரு சமையலறையில் காபி தூள் தேடுக்கொண்டிருந்தான்.
டேய் லூசு, உனக்கு ஒலுங்கா சுடுதண்ணிகூட போட தெரியாது, இதுல காபி போட்டு என்ன கொல பன்ன பாக்குறியா என்பது போல் பய
அழகாக பிறந்தாயே
எனக்காக வளர்ந்தாயே...
பனித்துளி சுமக்கும் புல்வெளியாய் ....
எந்தன் சோகத்தை சுமந்தாயே
உறைந்து போன தேகத்தை தான் ..
தீயாக காத்தாயே....
இறைவன் படைத்த எட்டாவது அதிசயமே ....
எட்டாத அதிசயமே .....
வானவில்லில் தீட்டபடா வர்ணமே ...
எந்தன் இருதயம் துடிக்குதே ...அடிக்குதே ...இசைக்குதே
உந்தன் வார்த்தை கேட்டு..
மெலிசை மன்னன் வாத்தியம் போல
இருகரம் நெருங்குதே ....
வாசிக்கவே வயலின் வாசிக்கவே ..
உந்தன் இடையினிலே
இதழ்கள் ..எந்தன் இதழ்கள் ஏங்குதே ..
உந்தன் உதட்டினிலே
நாதஸ்வரம் இசைத்திடவே ...
பெண்ணே ..
பீதோவன் இசைத்த இசை போல
இந்த மனதினிலே காதலை வாசிப்பாயா...
மருதாணி போட்ட கை சிவக்க ....
மல்லிகை பூவது மண மணக்க.....
மாலை நேர சூரியன் மங்கிடும் நேரம் ...
பனிகாற்று வீசயில ...நீ
பக்கம் வந்து போகயில.....
நீண்ட இரவும் சுருங்கிப் போகுதே ....
வெண்ணிலவும் .......உந்தன்
வெண்விழியாய் தோணுதே .....
நட்சத்திரம் பூவாய் வந்து விழுகுதே ......
உந்தன் நினைவு என்னை ......நெருங்குதே
படுத்து பார்த்து .....விழித்து விட்டேன்
காரணம் உறக்கம் இல்லை ......
விடியல் வரை காத்திருந்தேன் ...
கண் திறந்து பார்த்திருந்தேன் ....
கவிதை ஒன்று எழுதிடவே ....என்
காதலதை சொல்லிடவே .
மருதாணி போட்ட கை சிவக்க ....
மல்லிகை பூவது மண மணக்க.....
மாலை நேர சூரியன் மங்கிடும் நேரம் ...
பனிகாற்று வீசயில ...நீ
பக்கம் வந்து போகயில.....
நீண்ட இரவும் சுருங்கிப் போகுதே ....
வெண்ணிலவும் .......உந்தன்
வெண்விழியாய் தோணுதே .....
நட்சத்திரம் பூவாய் வந்து விழுகுதே ......
உந்தன் நினைவு என்னை ......நெருங்குதே
படுத்து பார்த்து .....விழித்து விட்டேன்
காரணம் உறக்கம் இல்லை ......
விடியல் வரை காத்திருந்தேன் ...
கண் திறந்து பார்த்திருந்தேன் ....
கவிதை ஒன்று எழுதிடவே ....என்
காதலதை சொல்லிடவே .