தமிழ் காதல்

உயிர் என் உயிரே...உனக்கு நிகர் இல்லையே
மெய்...உன் புன்னகை அது செம்மையே
உயிர்மெய்யே... உயிரோடு கலந்த தேவதை
நீ மெய்யே
ஆயுதம்...தேவையில்லை என்னை சாய்க்க
ஆழ முத்தம் போதுமே
குறிலாக உன் மேல் கோபம் கொள்ள
நெடிலாக நீ புருவம் தூக்கி சென்றாயே
இலக்கணம் காதலில் இல்லை
காதலுக்கு இலக்கணம் காதலியே
மோனையாக நீ முந்திச் செல்ல
எதுகை போல பின் வந்தேனே
ஐந்திணையும் தாண்டி ...அழகே
உன்னிடம் வந்தேனே
வல்லினமே...
மெல்லினமாய் ...காதல் சொல்லி
இடையினமாய் உன்னுள் சேர.,
அளபெடையாய் உயர்ந்து வருவேனே
சிலம்பும் ...மனிமேகலையும் சொல்லாத
காதல் கதை சொல்வோமே
தமிழக்கு தொல்காப்பியமாய்...
நான் உனக்கு இருப்பேனே...