அவளுக்காக
உயிரே ..
உன் கருவினுள் உதிக்க
வரம் ஒன்று வேண்டும்-அடுத்த
ஜனனம் இருப்பின் - உன்
அன்பெனும் நதியில் அருவியாய்
நான் பிறக்க....
**********
உயிரே
உன் விழியினுள் ஒளியாய் வர
இமையிடம் கேட்க.- இதழ்கள்
இசைந்ததால் முத்தமாய் சிக்கினேனே
**********
உயிரே
பிரிவினில் உள்ள துயரம்
உன் நினைவுகள்-என்னை
பிரியாததாலே......
***********
உயிரே
என்னை விட்டு உன்னை
கண்ணீராக வெளியேற்ற நினைத்தேன்
நனைந்தது நான் -அதில்
வளர்ந்தது நீ...
என் அன்பே...
***************