உயிர் உள்ளவரை

உயிர் உள்ளவரை
உன் பெயர்
சுமந்து
வாழ்வேன்....இவ்
உலகுள்ளவரை
உன்னைச்
சுற்றியே என்னுலகம்
இருக்கும்.....!!

தொலைவினில்
போனாலும்
தொலையாத
பாசம்....குறைந்திடாத
நேசம்.....குறைந்தபட்சம்
நம்மை
வாழவைக்கும்.....!!

நம்பி வந்த
ரோசா உன்னை
நலமாக
வாழவைப்பேனே
இந்த ராசா....!!

இசை பாடும்
என் குயிலே.....
என் உயிருக்குள்
விடை தேடும்
கேள்விகள் ஏனடி.....?
இந்த உயிரே
உனக்குத் தானே
அன்பே....!!?

என் மீது
தூறல் போடும்
சாரல் மழையே.....
தூரமாய்ப்
போன என்னவள்
மேனியை
கொஞ்சம் சீண்டிப்
போவாயா.....?
என் நினைவுகளை
மீட்டிச்
செல்வாயா.....?

என் உள்ளத்தில
நீதானே
இருக்கிறாய்.....உயிர்
உள்ளவரை
இருப்பாய்.....!!

வலிகளால்
நிரம்பிய
இந்த
வாழ்க்கை.....
உன் சிறு துளிப்
பார்வைக்காக
கனத்த மனதோடு
காதல்
செய்கிறேன்......!!

எழுதியவர் : thampi (6-Mar-16, 12:19 pm)
Tanglish : uyir ullavarai
பார்வை : 443

மேலே