கவிதை ஒன்று எழுதிடவே
மருதாணி போட்ட கை சிவக்க ....
மல்லிகை பூவது மண மணக்க.....
மாலை நேர சூரியன் மங்கிடும் நேரம் ...
பனிகாற்று வீசயில ...நீ
பக்கம் வந்து போகயில.....
நீண்ட இரவும் சுருங்கிப் போகுதே ....
வெண்ணிலவும் .......உந்தன்
வெண்விழியாய் தோணுதே .....
நட்சத்திரம் பூவாய் வந்து விழுகுதே ......
உந்தன் நினைவு என்னை ......நெருங்குதே
படுத்து பார்த்து .....விழித்து விட்டேன்
காரணம் உறக்கம் இல்லை ......
விடியல் வரை காத்திருந்தேன் ...
கண் திறந்து பார்த்திருந்தேன் ....
கவிதை ஒன்று எழுதிடவே ....என்
காதலதை சொல்லிடவே .