காதலின் மொழி

விழிகள் நனைந்திருக்க வெற்றிடம் நோக்கினேன் கண்ணே..
நீ வந்த சுவடுகள் நெஞ்சில் நிழலாட ..
நான் மட்டும் தனிமரமாய்..

உனை தினம் ரசிக்கிறேன் தனிரகமாய் ..

விழி மூடிய நடுநிசியில் எந்தன் ..
கனவுகளில்..
நெஞ்சம் நிறைந்தது ..
உனை..
நினைந்திட்ட வேளைகளில் ..
கண்கள் மட்டும் ஏனோ! களைத்து போனது..
உந்தன் நிழலேனும் நான் ..
காண கிடைக்காதா ...என ..

என் விழிகளில் குளிக்கிறாய் ...தினமும் ..
எந்தன் விழித்திரைக்குள் இருப்பதால்..

என் செவி அறைக்குள் சிரிக்கிறாய் ..
எந்தன் இதய அறைகளில் ..
என்றும் நீ இருப்பதால்..

தனிமையில் என் மௌனம் களைத்து
செல்லமே..என்றேன் சிறு குரலில் ..

யாரேனும் செவிமடுத்து ..எனை..
பித்தன் என கொண்டால்..??
ஆம்.
பித்தனானேன் உனை எண்ணி ..
என்றும் என்னுள் பிதற்றுவதால்

எழுதியவர் : பாகை இறையடியான் (5-Feb-15, 8:44 pm)
சேர்த்தது : பாகை இறையடியான்
Tanglish : kathalin mozhi
பார்வை : 70

மேலே