காதலுணர்வு

சீற்றம் கொண்ட என் இதயம் தனை உந்தன் ..
சில்லறை சிரிப்பால் சிதறடித்தாய்..
ஏக்கம் கொண்ட என் இதயம் தனை உந்தன்..
சிறு புன்னகைக்குள் புதுப்பித்தாய்...

தினமும் என் இரவுகளில் எந்தன்..
கனவுகளில் வந்திடும்..உன் முகம்..என்..
விழிகளை விட்டு விழுவதில்லை
எந்தன் உறக்கத்திற்கும் ஓய்வளித்தேன்..என்..
நினைவெங்கும் நீ வந்து நிரம்பியதால்..என் ..
இதயத்திற்கு ..என்றும் ஓயவில்லை..என்..
நெஞ்சு கூட்டில் நீ வாழ்வதால்..
உனை பிரிய பிரியமில்லை என்றும்..
ஆதலால் கண்ணே..
எம் பிரிவிற்கு விடையளிக்க ..ஒரு..
கேள்வியை தேடுகிறேன்..??

எழுதியவர் : பாகை இறையடியான் (5-Feb-15, 8:40 pm)
சேர்த்தது : பாகை இறையடியான்
பார்வை : 78

மேலே