சேராத காதலர்கள்

தேவதை சாலையில்
தேன் மேகம் வந்துகூட
தேனாய் மழை பொழிய
தித்திக்கின்ற காதலர்கள்.

மெய் மறக்கும் வேளையிலே
மென்மைக்கும் இடமுண்டு
சொல்லுக்கும் உரிமையுண்டு
சொல்லிடத்தான் முடியவில்லை.

காதலென்னும் சாலையிலே
கை விடாத காதலர்கள்
கை கோர்த்த காதல் கனவுதான்
பலிக்கவில்லை .......

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (5-Feb-15, 8:29 pm)
பார்வை : 276

மேலே