காதல் இசை
அழகாக பிறந்தாயே
எனக்காக வளர்ந்தாயே...
பனித்துளி சுமக்கும் புல்வெளியாய் ....
எந்தன் சோகத்தை சுமந்தாயே
உறைந்து போன தேகத்தை தான் ..
தீயாக காத்தாயே....
இறைவன் படைத்த எட்டாவது அதிசயமே ....
எட்டாத அதிசயமே .....
வானவில்லில் தீட்டபடா வர்ணமே ...
எந்தன் இருதயம் துடிக்குதே ...அடிக்குதே ...இசைக்குதே
உந்தன் வார்த்தை கேட்டு..
மெலிசை மன்னன் வாத்தியம் போல
இருகரம் நெருங்குதே ....
வாசிக்கவே வயலின் வாசிக்கவே ..
உந்தன் இடையினிலே
இதழ்கள் ..எந்தன் இதழ்கள் ஏங்குதே ..
உந்தன் உதட்டினிலே
நாதஸ்வரம் இசைத்திடவே ...
பெண்ணே ..
பீதோவன் இசைத்த இசை போல
இந்த மனதினிலே காதலை வாசிப்பாயா...