காதலின் உணர்வு
பெய்யும் மழையில்
என் மேல் விழும்
முதல் துளியின் சிலிர்ப்போ
உன் மேல் என்னுள் வந்த
காதலின் உணர்வு
என்னை இது வரை பார்த்திராத
ஒரு குழந்தை
என்னை பார்க்கும் பொழுது சிரித்தால்
அதில் கிடைக்கும் ஆனந்தமோ
உன் மேல் என்னுள் வந்த
காதலின் உணர்வு
நதியில் நின்ற பொழுது
என் காலை ருசித்த
மீனின் சிறு கூட்டம்
அது தரும் கூச்சமோ
உன் மேல் என்னுள் வந்த
காதலின் உணர்வு
காய்ந்த நிலத்தில்
துளிர்த்த முதல் செடியின்
நிறம் பச்சை
அதை காணும் பொழுது
வரும் நிறைவின் உணர்வோ
உன் மேல் என்னுள் வந்த
காதலின் உணர்வு
என் உணர்வில்
என் காதலி
காதலாய் கலந்தாள்
இதுவரை நான் வெறுத்த ஒன்று
உனக்கு பிடிக்கும் என்றதும்
அதை நேசிக்க தொடங்கினேன்
இதுவரை நான் நேசித்த ஒன்று
நீ வெறுக்கும் ஒன்று
என்று அறிந்து
அதை வெறுக்க தொடங்கினேன்
உணர்வு இருக்கும் வரை
காதல் வாழும்
நான் இருக்கும் வரை
உன் மேல் மலர்ந்த
என் காதல் நினைவுகள் வாழும்.