இதழால் ஓர் கவிதை

வேடிக்கையாய் ...
அவளுக்கு
அறைகூவல் கொடுத்தேன் ...
எனக்கான பிரத்யேக
கவிதையினை
எழுதி கொடுக்க ..
சில நொடிகள் ...
சிந்தித்தவள் ...
இமைக்கும் கணத்தில்
' கொடுத்து ' எழுதி சென்றாள் ....
'இச்'சென்ற
ஓர் 'நச்'சென்ற கவிதையை ...
அவள் இதழ் கொண்டு..
என் இதழில் ...