ஆம் மகனே
என் வாழ்வனைத்தும்
உனக்காக வாழ்ந்தேன்
என் வாழ்வின் அர்த்தம்
நீயெனவே இருந்தாய்
நான் உனக்கு வாழ்வியலின்
அதிகாரத்தை தந்தேன்...
இருந்தும் நீயோ
எனக்கு முதுமையின் பரிசாய்
தனிமையை கொடுத்தாய்
முதியோர் இல்லம் அமைத்து...
அங்கும் நான் வாழ கற்றுக்கொண்டேன்
என்னைப் போல் பலர்
என்னொடு வாழ்வதால்...
ஆம் மகனே
நான்தான் உனை ஈன்ற
அம்மா என உலகம் சொல்கிறது
உன்னை அன்றி...