விடி வெள்ளி
பட்டு மேனி!
பவழ உதடு!
பளிங்கு கண்கள்!
பதித்த மூக்கு!
பாலொழியும் முகம்!
இரவும் இன்று
பகலாய் மாறியதே!
முழுமையாய் காண
மூட்டுவலையை
முட்டிக்கொண்டு;
முன்னேறி வந்த
பௌர்ணமி நிலா!
வந்த நிலா
வாயடைத்து,
நொந்த நிலாவாய்
வழிமாறி செல்கிறதே!
வியந்து போன
நிலாவைப்பார்த்து
விரைந்து வந்த
சூரியன்!
விட்டத்தின் வழியே
வீட்டிற்குள் வந்து
வியந்துபோய் நின்றதில்:
திருஷ்டி வந்து சேருமே என்று;
திரைவைத்து மறைத்த தாய்!
படிக்க தெரியாதவளும்
பாடகியாகிறாள் - நின்
அழுகை சப்தத்தில்!