அன்னைக்கு அன்னையாய்

அன்னைக்கு அன்னையாய் -என்
முன்னே வந்தாயே.........

அவள் கரம் விலகவே
ஐயம் கொண்டு நின்றேனே........

அவளையன்றி நானும்
உந்தன் அன்னையென்று
நீயும் அணைத்தாயே.......

எந்தன் தலைகோதி
தாலாட்டுப் பாடியவள் நித்தம்
என்னை கண்ணுறங்க வைப்பாளே.......

எந்தன் கரம்பிடித்து நீயும்தான்
பாடல் ஒன்று படிப்பையே
பலதையும் கர்பிப்பாயே.....

உணவு உன்ன எண்ணினாலே
என் முன்னே தோன்றுவாளே
மடியமர்த்தி ஊட்டுவாளே
பாசத்தோடு பசியினிர்க்கே.......

மதிய வேலை வந்தவுடன்
நீயும் வந்து மண்டியிட்டு
மன்றாடுவாயே கொண்டு
வந்த உணவுதனை -உன்
முன்னே உண்ணிடவே........

ஓடி ஆடி நான் விளையாட
ஓரம் நிற்று ரசிப்பாளே-நீயும்
மாலை நேரம் வந்தவுடன்
என்னை பிடிப்பையோ
என்று கூறி என்னழைத்து
எத்திசைக்கும் ஓடுவாயே......

காலையில் கண்ணீர்
வடித்தேன் அவளுக்காய்......
மாலையில் செந்நீர்
வடித்தேன் இவளுக்காய்......

இல்லத்தில் ஒரு தாய்
என்னை ஈன்றெடுத்த
அன்னை என்றால்........

இவ்வகிலத்தில் எனக்கு
மற்றொரு தாய் நல்வழி
காட்டிய ஆரம்பப் பாடசாலை
ஆசிரியை நீயல்லவா.........


*********தஞ்சை குணா********

எழுதியவர் : மு. குணசேகரன் (28-Dec-15, 9:54 am)
Tanglish : annaikku annaiyaai
பார்வை : 152

மேலே