யாரறிவாரோ

உனக்கான முத்தங்கள்
மண்டிக்கிடக்கிறதென் உதடுகளில்

உனக்கான ஆறுதல்கள்
தேங்கிக் கிடக்கிறதென் விழிகளில்

உனக்கான அரவணைப்பு
பரவிக்கிடக்கிறதென் கரங்களில்

கருகொண்ட காலந்தொட்டு
உனைக்காண
ஆவலாய்க் காத்திருந்தேன்

நீ
இறந்தே பிறந்ததாய்ச் சொல்லி
சுற்றம் அழுதன

யாரிடம் கேட்டால்
நிஜந்தெரியும்

நீ இறந்தே பிறந்தாயா
அல்லது
பிறந்து இறந்தாயா
என் மகளே!

- தஞ்சை ப்ரணா (தானியம் கொத்தும் குருவிகள் தொகுப்பிலிருந்து.....)

எழுதியவர் : தஞ்சை ப்ரணா (28-Dec-15, 10:11 pm)
பார்வை : 71

மேலே