தலைப்பு

???????

தணியாத தாகம்
நெருப்பாக நெஞ்சில்
எரிகிறது வெறி திரியாக....

உறக்கம் இறக்க
பிறவும் வெருக்க
வாழ்க்கை சிறக்க
ஊரார் வெறிக்கத் திரிகின்றேன் கொள்கைக் கனலோடு.

தறிகெட்டுத் திரிந்த மனம்
நெறிவிட்டு அகல மறுக்கிறது
பணம்தேடி அலைந்து
அதனுள்ளே புதைந்து
மனமெல்லாம் சிதைந்து
மானம் கொன்று வாழ மறுக்கிறது

வழிகேட்டுச் செல்வதா??
வழிகாட்டி நிற்பதா!!!
வாழ்க்கைக்காக சாவதா??
வென்றுவிட்டு வீழ்வதா!!!
குழம்பித் திரிந்தாலும்
மனம் வெம்பிப் போனதில்லை,

செல்லும் தூரம் சிறுத்தாலும்
வெல்லும் நேரம் பெருத்தது
மனித வாழ்வு கசந்தது
புனித வாழ்வுக்காக மனம் குழைந்தது

இரைதேடிச் செல்லும் நாம்
இரையாகிப் போவோம்
இரையாகப் போகும் நாம்
இறை ஆகிப் போலாமே??!!!!

பணம் தின்று வாழ்ந்தாலும்
பிணமாகிப் போவோம்
பிணமாகப் போகும் நாம்
நம் சனத்துக்காக சாவோமே??!!!!

--யாரோ

எழுதியவர் : விவா (28-Dec-15, 9:52 pm)
சேர்த்தது : விவா
Tanglish : thalaippu
பார்வை : 187

மேலே