தஞ்சை ப்ரணா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தஞ்சை ப்ரணா
இடம்:  தாயூர்: தஞ்சை
பிறந்த தேதி :  12-Jan-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Nov-2015
பார்த்தவர்கள்:  84
புள்ளி:  32

என்னைப் பற்றி...

வணக்கம் என் பெயர் ப்ரணா. தாயூர் தஞ்சை. இதுவரை ஐந்து கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன்."நிழலும் சுடும்","ஹைக்கூ அல்ல","மழை நிகழ்ந்த போது","சாமரம் வீசும் கைகள்","தானியம் கொத்தும் குருவிகள்". மேலும் இரு இசை தகடுகள் (Music album) ளுக்கு பாடல்கள் எழுதியுள்ளேன்.கல்கியில் தொடர்ந்து எழுதி வருகிறேன். தமிழ் திரைத் துறையில் முத்திரை பதிக்கும் இலக்கோடு இயங்குபவன். தற்பொழுது பணி நிமித்தமாக பெங்களூருவில் வசித்து வருகிறேன்.---ப்ரணா

என் படைப்புகள்
தஞ்சை ப்ரணா செய்திகள்
தஞ்சை ப்ரணா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2018 7:40 pm

கல்கி, குமுதம் ஜங்ஷன், தினத்தந்தி-ஞாயிறுமலர், தினமணி-கதிர், மதுமலர், அம்பலம்.காம் ஆகிய இதழ்களில் பிரசுரமான எனது சிறுகதைகள் மற்றும் கல்கி குறுநாவல் போட்டியில் ரூ.20000 பரிசு பெற்ற குறுநாவல் அடங்கிய தொகுப்பு "பிள்ளையார் சுழி" இப்போது விற்பனையில்.
புத்தக விலை: ரூ. 66
சலுகை விலை: ரூ. 65 (தபால் செலவு ரூ.15 )
புத்தகம் வாங்க அணுகவும்:
ப்ரணா, 80085 - 82111

மேலும்

தஞ்சை ப்ரணா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 10:44 am

சட்டம் யார் 'கையிலும்' இல்லை
காசுள்ளவன்
காலடியில் கிடக்கிறது!

மேலும்

அருமை உண்மை . காசில்லாத ஏழை சிறையில் அவதிப் படுவான் . காசுள்ளவன் ஆனந்தமாய் ஜாமீனில் உலாவுவான் . 29-Dec-2017 2:03 pm
தஞ்சை ப்ரணா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 10:36 am

முதல் பார்வையில் காதலா?
அப்படியென்றால்?
ஆச்சரியமாய் கேட்டனர்
பார்வையற்ற காதலர்கள்!

மேலும்

தஞ்சை ப்ரணா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2015 10:11 pm

உனக்கான முத்தங்கள்
மண்டிக்கிடக்கிறதென் உதடுகளில்

உனக்கான ஆறுதல்கள்
தேங்கிக் கிடக்கிறதென் விழிகளில்

உனக்கான அரவணைப்பு
பரவிக்கிடக்கிறதென் கரங்களில்

கருகொண்ட காலந்தொட்டு
உனைக்காண
ஆவலாய்க் காத்திருந்தேன்

நீ
இறந்தே பிறந்ததாய்ச் சொல்லி
சுற்றம் அழுதன

யாரிடம் கேட்டால்
நிஜந்தெரியும்

நீ இறந்தே பிறந்தாயா
அல்லது
பிறந்து இறந்தாயா
என் மகளே!

- தஞ்சை ப்ரணா (தானியம் கொத்தும் குருவிகள் தொகுப்பிலிருந்து.....)

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 2:50 am
தஞ்சை ப்ரணா அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2015 7:09 am

பாராட்டு நீ –
உன்னைத் தினமும்
எதிர்பார்க்க வைக்கிறாய்

தென்றல் நீ –
என்னைக் கடந்து சென்றாலும்
என்னிடமே தங்க மறுக்கிறாய்

நெருப்பு நீ –
வெளிச்சமும் தந்து
மெளனமாய் மனதை
எரித்துக் கொண்டும் இருக்கிறாய்

தாய்நாடு நீ –
சில குறைகள் இருந்தாலும்
நேசிக்க வைக்கிறாய்

மரணம் நீ –
நிச்சயம் வருவாய்
என்றாலும்

‘என்று?’ என்பதைத்
தெரிவிக்க மறுக்கிறாய்

-தஞ்சை ப்ரணா (எனது "தானியம் கொத்தும் குருவிகள்" தொகுப்பிலிருந்து...)

மேலும்

நன்றி! - ப்ரணா 27-Dec-2015 6:04 pm
நன்றி! - ப்ரணா 27-Dec-2015 6:03 pm
எளிய நடையில் அருமையான படைப்பு..... 27-Dec-2015 2:59 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 11:15 am
தஞ்சை ப்ரணா - தஞ்சை ப்ரணா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2015 7:09 am

பாராட்டு நீ –
உன்னைத் தினமும்
எதிர்பார்க்க வைக்கிறாய்

தென்றல் நீ –
என்னைக் கடந்து சென்றாலும்
என்னிடமே தங்க மறுக்கிறாய்

நெருப்பு நீ –
வெளிச்சமும் தந்து
மெளனமாய் மனதை
எரித்துக் கொண்டும் இருக்கிறாய்

தாய்நாடு நீ –
சில குறைகள் இருந்தாலும்
நேசிக்க வைக்கிறாய்

மரணம் நீ –
நிச்சயம் வருவாய்
என்றாலும்

‘என்று?’ என்பதைத்
தெரிவிக்க மறுக்கிறாய்

-தஞ்சை ப்ரணா (எனது "தானியம் கொத்தும் குருவிகள்" தொகுப்பிலிருந்து...)

மேலும்

நன்றி! - ப்ரணா 27-Dec-2015 6:04 pm
நன்றி! - ப்ரணா 27-Dec-2015 6:03 pm
எளிய நடையில் அருமையான படைப்பு..... 27-Dec-2015 2:59 pm
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Dec-2015 11:15 am
தஞ்சை ப்ரணா அளித்த படைப்பில் (public) arshad3131 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Dec-2015 8:27 am

கோட்ஸே வீட்டு விருந்துக்கு
தயாராகிக்கொண்டிருந்தார் காந்தி

யூதாஸின் பாதுகாவலில்
உறங்கிக்கொண்டிருந்தார் ஏசு

பாபருக்கு ரமலான் வாழ்த்து
எழுதிக்கொண்டிருந்தார் ராமர்

பெரியார் பேசும் கூட்டத்திற்கு
புறப்பட்டுக் கொண்டிருந்தார் வாரியார்….!

கனவு கலைந்து
கண் விழித்து
பேருந்தில் இருப்பதை
உணர்ந்தறிந்து

ஜன்னல் வழியே
எட்டிப் பார்த்தேன்

பெட்டிக் கடைகளின்
வாயிலில் தொங்கும்
குட்டிச் செய்திகள்
தாங்கிடும் தாள்களின்
ஒற்றைச் செய்தியொன்று
என்னைப் பார்த்து
அதிர்ந்து சிரித்தது

“பங்காளி தகராறில்
தந்தையும் மகனும்
வெட்டிக் கொலை”

-தஞ்சை ப்ரணா (எனது "தானியம் கொத்தும் குருவிகள்" தொகுப்

மேலும்

நன்றி! - ப்ரணா 04-Dec-2015 1:31 pm
நன்றி! - ப்ரணா 04-Dec-2015 1:31 pm
செம...நெத்தியடி ... 04-Dec-2015 11:37 am
சிறந்த கவி வரிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2015 10:58 am
தஞ்சை ப்ரணா அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2015 8:50 am

எல்லா காலைப் பொழுதுகளும்
ஒன்று போல் துவங்குவதில்லை

சில..
தூக்கம் வரா விழிப்போடு
துவங்கலாம்

சில..
கனவுக்காக தூக்கம் தொடரும்
சுகத்தோடு

ஒரு சில..
அழும் குழந்தையின்
அவஸ்தை புரியா தவிப்போடும்

என்றைக்கும் போல்
இன்றைக்கு இருமலில்லாத தாத்தா
இருக்கிறாரா இல்லையா
ஊர்ஜிதப்படுத்தும் முனைப்போடும்

வேறுசில..
கவலைகளின் காலடி ஓசையோடு
துவங்கலாம்

மற்றும் சில..
பேப்பர்கார பையனின்
பிடிவாத மணியொலியோடு

என்றேனும் ஒரு காலைப்பொழுது
நம் மரணத்தோடு!

-ப்ரணா (எனது "தானியம் கொத்தும் குருவிகள்" தொகுப்பிலிருந்து...)

மேலும்

நன்றி- ப்ரணா 06-Dec-2015 7:39 am
ரொம்ப பிடிச்சிருக்கு இறுதி வரிகள் நன்றிகள் 06-Dec-2015 12:19 am
நன்றி! - ப்ரணா 05-Dec-2015 10:15 pm
வரிகள் அதீத அழுத்தத்துடன் !!! அருமை தோழரே 05-Dec-2015 9:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
மேலே