மனிதர் வேறு காதல் வேறு

* உலகில் வாழ்கிறோம்
ஒவ்வொருவரும் ;
சராசரியாய்
சகாப்தமாய்

சராசரி சகாப்தமாய்...!

* வாழும் உலகில்
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒவ்வொரு உலகு...!

* ஆயினும்
" நீயே
என் உலகு "
எனும் சொல்
வேண்டுதலில் ...

அணு வேரும்
தகிக்கிறது
கனன்று ;

யுகந்தோறும்
சுகிக்கிறது
மனிதம்...!

****************************************************************************************************************************************

* பேரன்பாய்க் குழையும்
மயக்கமொன்று ;
மேதாவி காட்டும்
தயக்கமொன்று ;

வீரியம் பேசும்
பார்வையொன்று ;
வசதியாய் மேயும்
பதவியொன்று ;

கற்பே பழைமை
தேகமொன்று - இது
கற்கை நன்றே
காமமொன்று

இன்ன பிற ...

இங்கே
ஆக்கி வைத்திருக்கிறது
அறிவியல் ;
கைக்குள் உலகு ...!

இன்னும் இவர்களுக்கு
"புனிதம் " புரியாமல்
"இதயம் " பித்தளையெனில் ;

போடவேண்டுகிறேன்

பேரீச்சம்பழமே நன்று...!

**************************************************************************************************************************************

* காதலின் மேடையே
மகாபலம்தான் ;

கொண்டவர் பேச்சு
பலம் மட்டும்
முழங்குவதல்ல...!

* காதலில்
புரியா பலவீனம் ;

மணமாகி
அறிவது அழகோ ...?

* அங்கே...

பழகிய " காதலே " ?
பலவீனம்தான் - நிஜம்
பரிமாறிக்கொண்டாலன்றோ
புனிதம் ...!

* பணிப் பொருத்தம்
பணப் பொருத்தம்
நிறப் பொருத்தம்
பார்த்துப் பழகிப் பறந்து...

மனப் பொருத்தமின்றி
பிரிவு நேரினும் ;

" காதல்
மாசுபடுவதில்லை ...! "

இதோ..
." கழிவியல் " வரலாற்றில்
புதிதாய்
இ(ழி)ரு மனிதர் ...!

****************************************************************************************************************************************

* ஏங்கி ஏங்கி
கலையும்
கலவியலல்ல ;

தாயின் மனதாய்
நிலைக்கும் - மழலை
உளவியல் ...!

* மனிதருக்குண்டு
மரணம் ;
புனிதத்திற்கில்லை ...!

* காதல் காதலாய்
புனிதமாகவே
இருக்கிறது ;

" காதல் இதுவென... "
தனக்கேற்ப
"கலர் " ஏற்றுகிறது
மனிதம் ...!

* மாறுவதே
மனித இயல்பாகிப் போனது ;

மாறாததே
காதல் நியதியானது...!

* ஆம் ...

மனிதம் வேறு ;
புனிதம் வேறு ...!

****************************************************************************************************************************************

* ஆர்ப்பாட்டமாய்
ஆக்கிரமிப்பதல்ல
காதல் ...

அது ;
மொட்டவிழும்
வார்த்தை ...!

தளிர்மிகு
உள்ளம் ...!

விட்டு விட
பட்டு விடும்
உயிர் ...!

மறுஜென்மம் கண்டும்
அழும்
ஆன்மா ...!

தவமே காதல்
வரமே இறை ...!

**************************************************************************************************************************************

* ஆதலால்...

" மிருகமே போ - புனித
மனிதமே வா ...! "

* அன்று ...

மனிதம் இனிது - என்றும்
காதல் அமுது ...!

எழுதியவர் : சுரேஷ்முத்தையா (30-Dec-15, 5:25 pm)
பார்வை : 105

மேலே