நேருக்குநேர் தரிசிக்க வேண்டும் உன் கண்களை 555

பிரியமானவளே...

என் விழிகள் உறங்காத
இரவுகளில்...

உன் நினைவுகளின் துணையோடுதான்
கரைந்து கொண்டு இருக்கிறேன்...

பூச்செடிகளை
பார்க்கும்போதெல்லாம்...

நீயென நினைத்து அருகில்
சென்று ரசிக்கிறேன்...

உன் கடைக்கண் பார்வையோடு
புன்னகையை கொடுத்து செல்லும் போது...

பக்தனைப்போல் பரவசபடுகிறேன்...

உன்னை நான் எதிர்கொள்ளும்
போதெல்லாம்...

என் பார்வையை உன் பாதங்களுக்கு
அர்ச்சிப்பதுதானே வழக்கமாக இருக்கிறது...

நீ என்னை காணும் போது
மட்டும்...

மண்பார்த்து நடக்காமல்
என்னை பார்த்து நடந்துவா...

தரிசிக்க வேண்டும் என் கண்கள்
உன் கண்களை...

நேருக்குநேர் ஒருமுறை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Dec-15, 4:48 pm)
பார்வை : 89

மேலே