அவளின் வியாபாரம் - உதயா

பிறப்பிடமும்
வாழ்கை சூழ்னிலையும்
கனவுகளுக்கு காலனில்லை
ஆனால் கனவுகள் தான்
உயிரோட்டமாய் இருக்கவேண்டும் ...!

வெறும் எட்டுமணி
நேரம் தான்
அவளை வகுப்பறை
அனுமதித்தது
கனவுதனில் ஒன்றான
அவளின் கல்வி வாசத்திற்கு ...!

நேரம் கிடைக்கும்
போதெல்லாம்
தன்னுடன்
இணைந்துவிடு என்று
அவள் கல்விக்கு
சுகந்திரமிட்டிருந்தாள் ...!

வீதியோரம் கடைவிரித்து
அவள் வியாபாரம்
செய்துக்கொண்டிருந்தாள்
வயிற்று பசிக்கும்
தேவையானதை பொருளாகவும்
மதி பசி அவசியம் என்பதை
உணர்ச்சிகளாகவும் ...!

எண்ணற்ற காரணங்களை
ஒரு செயலுக்கு அடுக்கி வைத்து
பலரும் முயலாமை முத்திரையை
தனதாக்கி கொண்டிருக்க
அவள் மட்டும் முடியும் என்பதை
முயற்ச்சியின் வாயிலாக
செயலுடன் சேர்த்து அகராதியாக
எழுதிக்கொண்டிருந்தாள் ...!

எதுவும் எதற்கும்
எவ்விதத்திலும் தடையில்லை
திடமிருந்தால் திட்டமிருந்தால்
தரணி உன் காலடியில் இன்றி
வேறெங்கும் இல்லை என
சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது
அவளின் வியாபாரம் ...!

எழுதியவர் : உதயா (30-Dec-15, 7:20 pm)
பார்வை : 154

மேலே