மழையில் மனிதம்

Web
more
Primary
சென்னையில் மழை நாள்

karthikai raman
to av
3 days agoDetails
சிங்காரச் சென்னை சிதைய ஆரம்பித்தது
ஒருநாள் பெய்த மழையால் அல்ல
ஓயாது பெய்த மழையால்...!

ஏரியை தின்று ஏப்பம் விட்டது
வீடுகள் எல்லாம் ..!

அதனால்
தண்ணீர் போக வழியில்லை
வழிதேடி வீட்டில்
அடைபட்டது...!

நீர் மட்டம் உயர உயர
குடிபெயர்ந்தார்கள் மக்கள்
உயர் மாடிக்கு...!

சீறிப்பறக்கும் கார்கள்
சிக்குண்டு மிதந்தன
தண்ணீரில்...!

ஒருநாள் இரு நாள்
பின் உண்ண உணவில்லை
தொடர் மழைனால்...!

பேருந்து ஓடிய தார்ச்சாலையில்
படகு ஓடியது
மக்கள் துயர் துடைக்க..!

ஒரு லிட்டர் பால் பகிர்ந்துண்டது
ஆறு வீடு.
ஓங்கி நின்றது நம்
ஒருமைப்பாடு...!

ஒப்பனை இல்லாமலே
ஹீரோவாகினான் நடிகன்
நடித்ததால் அல்ல
நலத்திட்டம் புரிந்ததால்...!

ஓயாமல் உதவியது
இளைஞர் கூட்டம்
அதற்கு ஒத்துழைத்தது
சமூக வலைதளம்...!

மீனவன் படை ஆனது
மீட்புப்படையாக
மீட்பவன் மக்களுக்கு
தெய்வமானான்...!

அரசியல்வாதியின் அகம்
புரிந்தது
ஆபத்தில் கூட மக்கள்
அவனுக்கு
அந்யோன்யம் தானா...?

இது இயற்கை சீற்றமோ
இல்லை
நாம் முன் செய்த
குற்றமோ...?

ஆற்றின் பாதையில்
அலுவலகம் கட்டியது
நம் குற்றம் தானே...!

தீதும் நன்றும் பிறர் தரவாரா...!

ஆதலால்,

இத்தனை இம்மையுள்
இம்மழையும் நமக்கு
ஓர் வரம்...!

ஏனெனில்,

மழையில் மறைந்தது
ஜாதி மதம்
மலர்ந்தது மனித நேயம்..!

- கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (30-Dec-15, 7:02 pm)
Tanglish : mazhaiyil manitham
பார்வை : 103

மேலே