தமக்கையில்லா தத்தளிப்பில் தம்பி

தஞ்சை பொம்மை தலையை
எதிர்மறையாய் ஆட்டுவதேன்?
தாஜ்மகால் பலுங்கி கல்லு
மழுங்கிய ஔி வீசுவதேன்?
பாரதியின் முண்டாசில்
எச்சங்கள் விழுந்தது ஏன்?
நாட்டுவாழ்த்து சொன்ன
நா பொசுங்கிப் போனது ஏன்?
அமரிக்க மாப்பிள்ளைக்கு
வாக்கப்பட்டுப் போராள் அக்கா.
தன் உற்றார்உறவவினரை
உதறித்தள்ள உள்ளமின்றி உருகுகிறாள்
தன் கற்பனைகள் கலங்கடிக்கப்பட்டுவிட்டதை
எண்ணி கதறுகிறாள்.
தன் கனவுகளை
கணவருக்காக கத்தரித்துவிட்டு
வெற்றிகரமாக நாடு கடத்தப்பட்டுவிட்டாள்.
தன் ஆசைப் பொருட்களை
ஐம்பது கிலோக்குள்
அடக்கமுடியாமல் அழுகிறாள்.
தடுமாற்றத்தினை தகர்க்கும்
தாய்மடி உறக்கத்திற்கு தவிக்கிறாள்.
உன் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டப்பட்ட
கண்ணாடி நம் கதைகள் சொல்கிறது.
உன் சீப்பிலிருக்கும் உதிர்ந்த
முடிதான் முடிவுரை சொல்கிறது.
இப்படிக்கு தமக்கையில்லா
தத்தளிப்பில் தம்பி.

-சுஜீத்

எழுதியவர் : சுஜீத் (30-Dec-15, 6:47 pm)
பார்வை : 107

மேலே