பால்யத்தின் கால்த்தடங்கள்

Gmail
Google+
Calendar
Web
more
Important
(no subject)
Inbox

karthikai raman
to nammakavithai
Nov 24Details
என் சிறுகால் பட்ட இடங்களில் இன்று
சிமெண்ட் தரைகள் உருப்பெற்று விட்டன....
தடயம் பதியாத சிமெண்ட் தரைகளில்
என் பால்யத் தடம் தேடுகிறேன்...!

பள்ளிக்காலத்தில் பம்பரம் சுழற்றிய
எங்களின் கரங்கள் இன்று
ஃபைல்கள் சுமந்து
வேலை தேடிக்கொண்டிருக்கின்றன...!

காடு மேடு கடந்து திரிந்த கைகால்கள்
அனைத்தும் இன்று
கணினி முன் அடக்கமாய்
மௌனம் சாதிக்கின்றன...!

நாங்கள் கில்லி விளையாடிய
அதே வயதினர்களின் கையில்
இன்று கிரிக்கெட் மட்டைகள்...!

கல்வியின் வேட்கை கூட இன்னும் புரிந்திராத இவ்வூரில்
கிரிக்கெட் ராஜ்ஜியம் நடத்துவது
ஆச்சரியம் தான்..!

வழியில் சப்பாத்திக்கள்ளி கண்ட உடன்
அதன் பழம்தின்று நா சிவந்து
முட்கள் குத்தி வலித்த ஞாபகம் வந்து
உதடு என்னை அறியாமல் துடிக்கிறது..!

களிமண் அள்ளித் தேய்த்து குளித்த
கண்மாய் கரைகள் நிசப்தமாகி
இன்று நீச்சல் குளங்கள்
நிரம்பிக் கிடக்கின்றன...!

வீட்டில் அரிசி பருப்பு திருடி
ஒன்றுகூடி ஆக்கித்தின்ற கூட்டாஞ்சோறு
அரைகுறையாக வெந்திருந்தாலும்
நம்முள் ஆனந்தம் லயிக்குமே...!

துரித உனவால் இன்று
நா ருசித்தாலும் அதை
மனம் ரசிக்கவில்லையே..!

சிறுகச் சிறுகச் சில்லரை சேமித்து
உண்டியலில் சேர்த்து வைத்து வாங்கிய
பொம்மை காரின் சந்தோசம் கூட
நிஜக் கார்கிளிடம் கிடைப்பதில்லை
பேன்ங் லோனில் வாங்கியதால்...!

வீதி முழுவதும் புழுதி கிளப்பி பறந்த
"டயர்" வண்டி மண்தடங்கள்
அடையாளம் தெரியாமல் இன்று
தார்ச்சாலைகளாக பரிணமித்துவிட்டது...!

பள்ளி முடிந்து ஓடிவந்து
கட்டித்தழுவும் கன்றுக்குட்டியின்
கொட்டகை இன்று
வெறுமையாக காற்று மழையில் பாழடைந்து கிடக்கிறது...!

தாத்தா பாட்டியிடம் கதை கேட்பதற்காகவே
"கரண்ட் போகனும் சாமி" என்று
நாங்கள் நடத்தும் பிரார்த்தனை...!
கரண்ட் வந்ததும்
சந்தோசத்தில் எடிசனையே மிஞ்சும்
ஆனந்த களிப்பு...!

எப்பொழுதும் வீட்டின் முன்
கூரையில் வந்து கீறீச்சிடும்
சிட்டுக்குருவி...!
இன்றோ ,
கூரையுமில்லை
சிட்டுக் குருவியுமில்லை
நாகரீக மாற்றத்தால்...!

கார்மேகம் புடைசூழ
வீதியெல்லாம் தட்டான் பறக்க
மார் எடுத்து அடித்து கொன்று குவித்த
"முதல் கொலைகார யுத்தம் "

கண்ணி வைத்து ஓணான் பிடித்து
மூக்குப்பொடி போட்டுவிட்டு
ஆடவிட்டு வேடிக்கை பார்த்த
"முதல் சர்க்கஸ்"

இருட்டில் ஒளிந்ததால்
நண்பனுக்கு தேள் கொட்ட
" முதல் வீர விளையாட்டாகிப்" போன
ஐஸ் பாய் விளையாட்டு...!

சிற்றாடை உடுத்தி
நான் குளிக்க
பள்ளித் தோழி என்னைப்
பார்த்து சிரிக்க
நான் வெட்கத்தில் தலை
நம்ம வீட்டுலையும் பாத்ரூம் கட்டுங்கம்மா என்று அம்மாவிடம் வைத்த
" முதல் கோரிக்கை "

விழுந்த பல்லில் சாணம் உருட்டி குடிசையில் தூக்கி எறிந்த
"முதல் மூடநம்பிக்கை "

எங்கள் ரமணன்
விட்டியைப் பிடித்து
"எந்த பக்கம் மழை பொய்யுது "
சொல்லு என்று கேட்ட
"முதல் ஜோசியம்"


திருடித் தின்று சுவை கண்ட
உடையார் கடை முறுக்கு
உப்பு மிளகாய் அரைத்து
சாப்பிட்ட புளியங்காய்
புளித்தாலும் ..
அந்நாட்கள் இன்னும் இனிப்பவை..!

தடுக்கி விழுந்ததால் காலில்
காயம் உண்டாக
கால்மண் எடுத்து அப்பிய
மண் வைத்தியம்...!

ஐந்துகல் ஏழுகல் பொறுக்கி ஆடிய
தட்டாங்கல் ஆட்டம்..!

குரங்கு பெடல் போட்டு
ஓட்டி பழகிய அப்பா சைக்கிள்..!

உள்ளே ஓராயிரம் உயிர்
இருப்பது போல்
கவிழ்ந்துவிடக் கூடாதென
மனம் பதை பதைக்க
மழைத் தண்ணீரில் விட்ட
காகிதக் கப்பல்...! வரை

இளமையின் ஒரு துளியும் தவறவிடாத
சமுத்திரம் போல்
நினைவுகள் எத்தனை எத்தனை...!

ஆதலால் மனிதா...

காலத்தை வெறுக்க வைக்கும்
கணினி தள்ளிவை கொஞ்ச நேரம்..!

ஓயாமல் தொல்லை செய்யும் செல்போன்
தவிர் சில மணி நேரம்..!

பகலின் இரைச்சல் தவிர்த்து
இரவின் அமைதி காண்..!

நிலா வளரும் மெல்லிசை
கேள தயாராகு...!

மொட்டு விரிந்து மலராகும்
அதிசிய காட்சி காண்..!

அமைதியின் தாழ்வாரத்தில் உன்
மனக்குரல் கேள்..!

ஒப்பனைகள் திரிந்து
வாழ்வின் அர்த்தம் புரியும்..!

- கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (30-Dec-15, 6:47 pm)
பார்வை : 75

மேலே