ஆழி தீவு

நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட கடலின் நடுவே அழகியதொரு தீவு ,தீவின் பெயர் ஆழி

அங்கே வாழ்பவர்கள் பழங்குடி மக்கள்

அமைதி ,அன்பு,என நிம்மதியான வாழ்க்கை

அவர்களுக்கு ஒரு அரசர் என சொர்ங்க வாழ்க்கை

அப்போது தான் படகு போக்குவரத்துக்கள்,பயணங்கள், தீவிற்க்கும் மற்ற நாடுகளுக்கும் வர போகலானது

ஆழி தீவின் அரசரும் பல நாடுகளுக்கு படகில் அவ்வப்போது சென்று வரலானார்

மற்ற நாடுகளில் வாழ்ந்த முன்னோர்களின் உருவங்களை பெரும் பல அடி உயரங்களுக்கு பிரம்மான்டமான சிற்ப்பங்களாக செய்து வைத்திருந்தனர்

அதைப் பார்த்த ஆழி தீவின் அரசருக்கும் நம்மையும் எதிர்காலத்தில் வரும் மற்றும் வருங்கால சங்கதியினர் தம்மையும் புகழுடையவனாய் போற்ற வேண்டும் என்று பேராசைக் கொண்டார்

அதனால்,ஆழி தீவின் அரசர் தன் தீவில் தனக்கென பெரும் பிரம்மான்ட பெரிய சிலை அமைக்க தன் தீவு மக்களுக்கு உத்தரவிட்டார்

மக்களும் தீவில் உள்ள மரங்களை வெட்டி அரசரின் சிற்பத்தை பெரியதாக எழுப்பிக் கொண்டே போனர்

சிற்பம் பெரிதாக பெரிதாக ஆழி அரசருக்கு பேராசையும் கூடி கொண்டே போனது ,அதனால் தன் சிற்பத்தை மேலும் மேலும் பெரிதாக செய்ய உத்தரவிட்டார்,

பேராசை கட்டுக்கடுங்காமல் போனது ,இன்னும் இன்னும் பெரிதாக்க உத்தரவிட்டார்,

மக்களும் அரசரின் பேச்சை தட்டமுடியாமல் அந்த தீவில் உள்ள மரங்களையெல்லாம் வெட்டி வெட்டி சிற்பத்தை பெரிதாக்கிக் கொண்டே போனர்,

ஆழி தீவில் உள்ள மரங்கள் எல்லாம் சிற்பங்களுக்காக முழுவதுமாய் வெட்டப் பட்டு விட்டது ,

சிற்ப்பம் செய்து முடியும் முன்னே

ஆழி தீவில் உள்ள மக்கள் ,குழந்தைகள்,உயிரினங்கள் எல்லோரும் பசியால் துடிதுடித்து துடிதுடித்து பசி தாங்காமல் ஒருவர் கண் முன்னே மற்றொருவர் என ஆழி அரசர் உட்பட அணைவரும் மாண்டே போனர்

(இது உண்மை கதை பலநூற்றாண்டுகளுக்குமுன்புநடந்ததுதது)

இப்போதும் நாம் தெரிந்தே இதே தவறைத் தான் செய்து வருகிறோம்

எழுதியவர் : விக்னேஷ் (31-Dec-15, 1:00 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : aali thivu
பார்வை : 330

மேலே