சித்தப்பா
![](https://eluthu.com/images/loading.gif)
பல ஆண்டுகளுக்குப்
பின்பு,சரியாக
சொல்வதானால் என் பால்ய
வயதிற்கு பின்பு
இன்றுதான் அங்குச்
சென்றேன்.பசுமை
போர்வை போர்த்தி
துயில் கலைய
மனமில்லா கன்னியாய்
சிலாகித்து
உறங்கிக்கொண்டிருந்த
நாற்றுகளுக்கு
ஜீவனளித்துக்
கொண்டிருந்தது அந்த
ஒற்றை "பம்ப் செட்".
என் அம்மாவின் தங்கை
கணவரின்,என்
சித்தப்பாவின்
நிலங்களவை...தன் தந்தை
விட்டுச் சென்ற ஒரு
ஏக்கரை மூன்று ஏக்கராக
மாற்றிய திறனில்
மிளிர்ந்தது அவரின் கடின
உழைப்பு. தன் நிலங்களை
உயிரென நேசிக்குமவர்
தன் கண்பட யாராவது
வரப்பு மேல்
செருப்பணிந்து
செல்வதைக்
கண்டுவிட்டால்
அவ்வளவுதான்...!இன்றைய
"பீப்"பாடலென்ன அது
போல் ஓராயிரம்
வார்த்தைகளில்
சாடுவார்...!
ஆயினும்,திருமண
வீடு,தேநீர் கடைப் போன்ற
பொதுவிடங்களில்
அநாகரீக சொற்கள்
எதையும் அவர் நா
உதிர்க்காது!...அப்பா
வியாய்
அமர்ந்திருப்பார்!..வி
வசாயிகளின் இயல்பு
இதுதான்...மெத்த படித்த
மேதாவிகளிடம்கூட
காணக்கிடைக்காத "சபை
நாகரீகம்"...!
என் பதின்பருவ
விடுமுறை
நாட்களில்,அவரது
மகன்களுடன்,என்
அண்ணன்களுடன் வயலில்
வேலை செய்யும்
அவருக்கு மதிய உணவு
வாளி தூக்கிச்செல்லும்
தருணங்களில் தான்
சிறிதுண்டு எங்களுக்கே
மீதியை பகிர்ந்தளிக்கும்
அவர் பாண்மை
விருந்தோம்பலின்
அரிச்சுவடியை கற்றுத்
தந்ததெனக்கு!
அவரது வயலில் வேலைச்
செய்யும்
"ஆரோக்கியம்"என்ற
வேலையாள்
கொண்டுவரும்
உணவை,தொட்டுக்
கொள்ளும் பதார்த்தங்களை
சித்தப்பாவும் அந்த
பணியாளும் கால்நீட்டி
போட்டபடி சரிசமமாக
அமர்ந்துண்ணும் காட்சிகள்
அலாதியானவை!...
இவ்வளவுக்கும்
அப்பணியாள் வேறு
சாதி!...இருப்பினும்
அவரை "அண்ணே!"என்றே
அழைப்பார் என்
சித்தப்பா...நானும் என்
சித்தப்பா மகன்களும்
அப்பணியாளை
"பெரியப்பா"என்றழைப்போ
ம்...!
வெற்றிலைப்பாக்கு
கறையேறிய பற்களுடன்
உணவருந்த கரையேறும்
தருணங்களில் நான்
அப்பெரியப்பாவை
கதைக்கேட்டு
நச்சரிப்பதுண்டு...அக
்குறுகிய வேளையில்
அவர் சொல்லும் கதைகள்
பெரும்பாலும்
இயற்கையாகவும் சிற்சில
வேளைகளில் மாயாஜால
ரகமாகவும் இருக்கும்...!
மழைப்பொழியும்
கார்த்திகை மாத
நாட்களில் பாதியில்
கரையேறுகையில்
பம்ப்செட்
கொட்டகையிலமர்ந்து
பழைய திரையிசைப்
பாடல்களை
பாடுவணுண்டு
கொட்டும் மழைச்சாரல்
கீற்று நுனியில் கசிந்து
விழுந்து எழும்பும்
சப்ததிற்கு மிக ஏதுவாய்
இருக்கும்
அப்பெரியப்பாவின்
குரல்...மழை நாட்களில்
அப்பாடல் கேட்கும் நொடி
மனம் இனம் புரியா
தத்துவார்த்த உச்சங்களில்
நிலைக்கொள்ளும்!
சித்தப்பாவிற்கு மூன்று
மகன்கள்.அதில்
கடைக்குட்டியை
"B.E"படிக்க வைக்க இரண்டு
ஏக்கர் நிலங்களை அடகு
வைத்தவர்,அவனை நல்ல
சம்பளத்திற்கு வெளிநாடு
அனுப்ப மீதி இருந்த ஒரு
ஏக்கர் நிலத்தையும்
விற்று
போலி ஏஜென்டை நம்பி
ஏமாந்து,அடகு
வைத்ததையும் மீட்க
இயலா நிலையில் இன்று
நொடித்திருந்தார்!
மனதளவிலும்..! நில
போகத்தில் ஏகபோகமாய்
இருப்பவர் சற்று
நொடித்தாலும் சக
விவசாயி விமர்சிக்கும்
விதமும்
பழகும் கோணமும்
முற்றாய்
மாறுபடும்...அவ்விதமான
இம்சைகளை
சித்தப்பாவும்
அனுபவிப்பதை உணர
முடிந்தது என்னால்!...
இன்றோ அவர் மகன்களும்
சுதாரிப்பற்று போன
நிலையில்..மன
வேதனையில்
நடைப்பிணமாய்
மாறியிருந்தார்...!
இன்றேனோ அவர் கண்
முன்பே செருப்பணிந்து
வரப்புகளில் நடக்கும்
ஆட்களை அவர்
சாடுவதில்லை. என்
கால்களில் மிதியடி
இருப்பதைக் கண்டும் அவர்
ஏதும் பேசாது நளினமாய்
சென்றது,ஏதோ விட்டுத்
தெரிந்தது...அப்படியெ
ல்லாம் மீண்டுமவர் என்னை
ஏச மாட்டாரா? என்ற ஏக்கம்
மேலிட,கூடவே அந்த பம்ப்
செட்டின் ஊடான என்
பால்ய நினைவுகளும்
கோர்த்துக்கொள்ள கண்கள்
உடைவதை என்னால்
கட்டுப்படுத்த
இயலவில்லை....!
"நல்ல ஏஜென்டா பாத்து
பணம் கட்டியிருந்தா
மீதிமிச்ச நிலமாவது
இன்னைக்கு
சாப்பாட்டுக்கு
இருந்திருக்கும்" என்றேன்
உடைந்த குரலில்...!
முற்றி சாய்ந்துக்
கிடக்கும்
அடகுவைக்கப்பட்டு
அயலான்
போகத்திலிருக்கும் தன்
நிலங்களை சற்று
வெறித்துப் பார்த்தவர்
"விட்றா...கஷ்டப்பட்டு
சம்பாரிச்சது...எங்க
போயிடப் போகுது?! என்
மவனுகளுக்காக
படாதபாடுபட்டு
வாங்குன
நிலம்...அவனுகளுக்காக
தானே
போச்சு...விடு..நாளைக
்கு அவனுக
தலைதூக்கிட்டா மறுபடி
மீட்காமலா
போயிடப்போறோம்?!..."வா
ர்த்தைகள் திணறியபடி
வந்து விழுந்தன.
என்னைப் போலவே
அவரும்
உணர்ச்சிமயமாயிருப்பதை
உணர முடிந்தது...!என்ன
நினைத்தாரோ
பெருகிவரும் கண்ணீரை
துண்டால்
துடைத்தபடி,வழமைக்கு
மாறாய் அதிக சொற்கள்
உதிர்த்துவிட்ட வேகத்தில்
அடுத்த வேலையைப்
பார்க்க
வீறுநடைப்போட்டு
முன்சென்ற சித்தப்பாவின்
வெடித்த பாதங்களை
சற்று நேரம் பார்த்தபடி
அச்சடித்த பதுமையாய்
நின்ற என் காதுகளில்
ஏதோ ஒரு வகையில்
உயர்ந்த உண்மையை
கண்டுகொண்ட அவரது
ஞான வாசகங்கள்
நெடுநேரம்
எதிரொலித்தவண்ணமிருந்
தன...!
**********************