அலைபேசி

நான் உன்னை நேசிக்க தொடங்கிய நாள் முதல்
எனது அலைபேசி உன் பெயரை சொல்லி சிணுங்குகிறது....
உனது இன்னிசை குரல் கேட்காமல் எனது அலைபேசியின்
ஒலிபெருக்கி கூட சோக கீதம் பாடுகிறது.....
உனது அழைப்பு வந்ததும் எனது அலைபேசி
வெட்கத்தினால் துடிக்கிறது " vibration " ஆகா....
உன்னால் எனது உயிரற்ற அலைபேசி கூட
உயிர் பெறுகிறது.....
அப்படியானால் உயிர் உள்ள "நான்"...

எழுதியவர் : நிர்மல் குமார் v (31-Dec-15, 3:47 pm)
Tanglish : alaipesi
பார்வை : 329

மேலே