நகர்ந்திடும் நிமிஷங்கள்

மலர்ந்தும்
மலராத
மலர்போல.....
இவ்வாண்டின்
இறுதி நிமிஷங்கள்
என் மனதை
இம்சிக்கிறது.....!

வெடி ஓசை
கேட்கிறது.....
விடிகாலை
பூக்கிறது....
உலகுக்கு எல்லாம்
புதிதாய் ஒரு
ஆண்டு.....சோகங்கள்
துரோகங்கள்
எல்லாம் விட்டு
மீண்டு நாமும்
வரும் ஆண்டில்
அன்பால் உலகை
வெல்வோம்.....!

இயற்கையின்
கோபத்தில்
இறுதிவரை
போராடி....
இனி வரும்
ஆண்டில் அடி
எடுத்து அழகாய்
வாழ்வோம்.....!

எழுத்தின்
நிர்வாகிகள்,சக
தோழர் தோழிகளுக்கு
என் ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்.....!!


என்றும்
நட்புடன்......
இவன் thampu

எழுதியவர் : thampu (1-Jan-16, 3:44 am)
பார்வை : 167

மேலே