இதுவும் காதல்
ஒரு நொடியில் கூட
உன்னை பிரிய மறுக்கின்றேன்...!!!
ஒரு நாழிகை கூட
உன்னில் தனித்துவாழ விரும்பவில்லை...!!!
என் கண் சிமிட்டும் நேரத்தையும் தவிர்க்கின்றேன்
என் இமை உன்னை காண்பதற்காக...!!!
இது காதல்...
விரல்விட்டு என்னும் நொடியில்
என்னை விட்டுச்செல்ல நினைக்கின்றாய்....!!!
நீ என்னை தனித்து
உந்தன் தனிமையை விரட்டுகின்றாய்...!!!
உன் பார்வையை மறுக்கின்றாய் என்னிடமிருந்து
நான் நீ மறைக்கின்றாய் என்று நினைத்து....!!!
என் மதி இல்லாமல்
உன் மதியில் வாழ்கின்றேன்...!!!
இதுவும் காதல்...